அஜித் பற்றி கொஞ்ச காலங்களாக எந்த செய்திகளும் வராமல் இருக்க சமீபத்தில் வந்த செய்தி ஒன்று அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இதை தமிழ் சினிமாவில் நடிக்கும் பிரபல நடிகர் ஒருவர் தன் பேஸ்புக் பக்கத்தில் இதை தெரிவித்துள்ளார்.
இதில் "வெளிவராத செய்தி" - திரையுலகில் இருப்பவர்கள் திரையில் வேண்டுமானால் அள்ளிக் கொடுக்கும் வள்ளலாகவும், அதிரடி காட்டும் மன்னனாகவும்இருப்பார்கள்.
ஆனால், நிஜத்தில் எச்சிக்கையால் ஈ விரட்டக்கூட தயங்குவார்கள். இத்தகைய ஆட்களுக்கு மத்தியில் அல்டிமேட் அஜீத் செய்திருக்கும் அற்புதமான உதவி நம் கவனத்துக்கு வந்தது.
பிரபல பத்திரிக்கையில் புகைப்படக்காரராகப் பணியாற்றும் ஒருவரின் மகளுக்கு கேன்சர் பாதிப்பு. பல லட்ச ரூபாய் இருந்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்கிற நிலைமை. திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கும் இந்த தகவல் போக, கையில் கிடைத்ததைக் கொடுத்திருக்கிறார்கள் பலரும். இதில் அதிகபட்ச தொகையே ஐம்பதாயிரம்தானாம். இதற்கிடையில் குமரேசனும் பத்திரிக்கை நண்பர்கள் சிலரும் அஜீத்தை சந்தித்து இதுகுறித்து சொல்லியிருக்கிறார்கள்.
கவலையோடு கேட்ட அஜீத் சில நிமிடங்கள் காத்திருக்கச் சொல்லிவிட்டு வீட்டுக்குள் போயிருக்கிறார்.ஒரு சிறிய பேக்கோடு வெளியேவந்திருக்கிறார். அதைக் குமரேசனிடம் கொடுத்து, ‘இதில் எவ்வளவு இருக்குன்னு எனக்கு தெரியாது. இப்போதைக்கு இதை வைச்சு மகளோட ட்ரீட்மெண்டை ஆரம்பிங்க. நானே மறுபடியும் உங்களை கூப்பிடுறேன்’ எனச் சொல்லியிருக்கிறார் அஜீத். கூடவே, ‘நான் உங்களை பத்திரிக்கையாளரா நினைச்சு இந்த உதவியை பண்ணலை.
தயவுபண்ணி அஜீத் இப்படி உதவினார்னு எழுதிடாதீங்க’ என்றும் சொல்லியிருக்கிறார் அஜீத். அவர் கொடுத்த பையில் இருந்தது 13 லட்சங்களாம்…தலை சுத்த வைக்குறீங்களே ‘தல’ ’ என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment