↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஸ்பெக்டர்' என்ற படத்தில் ஜேம்ஸ்பாண்ட் 007 வேடத்தில் நடித்து வரும் டேனியல் கிரேக் அவர்களுக்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டதாகவும் அதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
டேனியல் கிரேக், ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடித்து வரும் ஸ்பெக்டர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பைன்வுட் ஸ்டுடியோவில் (Pinewood Stuidos) நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் ஒரு சண்டைக்காட்சியில் நடித்துகொண்டிருந்தபோது, டேனியல் கிரேக் அவர்களுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது.
காயம் காரணமாக படப்பிடிப்பு தடைபடும் என படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்த நிலையில் டேனியல் கிரேக் காயத்திற்கு முதலுதவி எடுத்துவிட்டு தொடர்ந்து படப்பிடிப்பில் பங்குபெற உள்ளதாக அவரது தரப்பில் இருந்து கூறப்பட்டதால் படக்குழுவினர் நிம்மதி அடைந்தனர்.
வரும் நவம்பர் மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிப்பு செய்துவிட்டதால் மிகக்குறுகிய கால இடைவெளிக்குள் மீதியிருக்கும் படப்பிடிப்பையும், போஸ்ட் புரடொக்ஷன் பணிகளையும் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஸ்பெக்டர் குழுவினர் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment