மத்திய கிழக்கு நாடுகளில் 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இளவரசர் சார்லஸ், பிரித்தானியா நாட்டை சேர்ந்த இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்ற தூண்டும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை கடுமையாக கண்டித்துள்ளார்.
பிரித்தானியாவில் பிறந்த அல்லது நாட்டிற்குள் புதிதாக வரும் இஸ்லாமியர்கள், பிரித்தானியாவின் சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இணையதளங்கள் மூலம் பிரித்தானியா இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக மாற்ற தீவிரவாத அமைப்புகள் முயற்சி செய்து வருவது நாட்டிற்கு பெறும் அச்சத்தை ஏற்படுத்துவதாக இளவரசர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாத தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான கிறுஸ்த்துவர்கள் கொல்லப்பட்டதை கண்டித்த அவர், தாக்குதலை தடுக்கும் விதத்தில் நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் மத்திய கிழக்கு நாடுகளில் கிறுஸ்த்துவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுவிடும் என்றார்.
நேற்றிரவு ஜோர்டன் நாட்டிற்கு வந்த இளவரசர் சார்லஸ், அங்கிருந்து சவுதி அரேபியாவிற்கு சென்று அந்நாட்டு மன்னர் சல்மானை சந்திக்க உள்ளார்.
மேலும், சவுதி அரசாங்கத்தால் 1000 சவுக்கடிகளை தண்டனையாக விதிக்கப்பட்ட Raif Badawi-ன் தண்டனையை ரத்து செய்ய மன்னரிடம் இளவரசர் வலியுறுத்துவார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment