↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சுவிட்சர்லாந்தில் முதுமையடைந்த ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் உள்ளிட்டவர்கள் தங்குவதற்கு காப்பகங்கள் அமைக்க தனியார் அமைப்பு ஒன்று முடிவு செய்துள்ளது.
LGBT (Lesbian, Gay, Bisexual, Transgender) வகையை சேர்ந்தவர்கள், முதுடையடைந்த வயதில் பல இன்னல்களை சந்திக்கின்றனர்.
எனவே, இவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் புதிய காப்பகங்கள் மற்றும் அடுக்குமாடி வீடுகள் அமைத்து தர ஏதுவாக ஒரு தனியார் அமைப்பு சூரிச் (Zurich) நகரில் உருவாக்கப்பட்டுள்ளது.
சிகி ஸ்ரிட்டிகன்பெர்கன் (Sigi Strickenberger ) என்ற ஓரினச்சேர்க்கையாளர், கடந்த 7 வருடங்களாக முன்பு LGBT வகையை சார்ந்தவர்களுக்கு ஆதரவளிக்கும் காப்பகத்தில் தங்கியிருந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இது போன்ற நபர்களுடன் பழகுவது ஆதரவாக உள்ளது என்றும் காப்பகங்களில் எங்களை கவனித்துக்கொள்ள பணி ஆட்கள், செவிலியர் இருப்பது அவசியம் எனவும் கூறியுள்ளார்.
ஏனெனில், பிற பாலினத்தை போல், தங்களை கவனித்துக்கொள்ள, எங்கள் பாலினத்தை சார்ந்தவர்கள் இருப்பது மிகவும் ஆரோக்கியம் என கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, LGBT பாலினத்தை சேர்ந்தவர்களை பராமரிக்கும் பொருட்டு உருவாக்க இருக்கும் காப்பகங்கள் இன்னும் 5 வருடங்களில் செயல்பட தொடங்கும் என அந்த அமைப்பை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top