↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
உலகக் கோப்பைப் போட்டிகளுக்கு முந்தைய வார்ம் அப் போட்டிகள் தொடங்கி விட்டன. இன்று நடந்த போட்டியில் இந்தியாவை, ஆஸ்திரேலியா பிரித்து மேய்ந்து விட்டது. அடிலைடில் நடந்த வார்ம் அப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்தியப் பந்து வீச்சை வழக்கம் போல பொறித்து எடுத்து விட்டனர் ஆஸ்திரேலிய வீரர்கள்.

முதல் பந்து முதல் கடைசிப் பந்து வரை ரன் மழை பொழிந்தோடியது. டேவிட் வார்னர் ஒரு சதம் போட்டார். கிளன் மேக்ஸ்வெல் மறுபக்கம் அதிரடியாக ரன்களைக் குவித்து இந்தியாவை நையப்புடைத்தார். வார்னரும், ஆரோன் பின்ச்சும் சேர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். 

வார்னர் 83 ரன்களில் 104 ரன்களைக் குவித்தார். பின்ச் 20 பந்துகளில் 20 ரன்களை எடுத்தார். வாட்சன் 17 பந்துகளில் 22 ரன்களை விளாச, ஜார்ஜ் பெய்லி 44 ரன்களைச் சேர்த்தார். ஆனால் உண்மையான அதிரடியைக் காட்டியவர் மேக்ஸ்வெல்தான். 57 பந்துகளைச் சந்தித்த அவர் 122 ரன்களை வெளுத்து விட்டார். இறுதியில், 48.2 ஓவர்களில் ஆஸ்திரேலியா 371 ரன்களைக் குவித்து ஓய்ந்தது. இந்தியப் பந்து வீச்சாளர்களின் செயல் திறமின்மை மீண்டும் ஒருமுறை இன்று நிரூபணமானது.

8 பந்து வீச்சாளர்களைக் கேப்டன் டோணி இன்று பயன்படுத்தினார். இவர்களில் ரனகளைக் குறைவாக கொடுத்தவர் அஸ்வின் மட்டுமே. ஆனால் அவருக்கு ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை. முகம்மது சமி 83 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்களைச் சாய்த்தார். உமேஷ் யாதவ் 52 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்களையும், மொஹித் சர்மா 62 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்களையும் எடுத்தனர். ஸ்டூவர்ட் பின்னிக்கும், அக்ஷர் படேலுக்கும் தலா 1 விக்கெட் கிடைத்தது. புவனேஸ்குமார் 5 ஓவர்களை வீசியும் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. ரவீந்திர ஜடேஜாவும் அப்படியே 2 ஓவர் வீசி 19 ரன்களை அள்ளிக் கொடுத்தார். 

இந்தியாவின் பந்து வீச்சு மகா மோசமாக உள்ளது என்பதை இன்றைய போட்டி எடுத்துக் காட்டியுள்ளது. இந்தியா கண்டிப்பாக சுதாரிக்க வேண்டும். இல்லாவிட்டால் நிச்சயம் கஷ்டமாகி விடும் என்பது ரசிகர்களின் கவலையாக உள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top