தியேட்டர் உரிமையாளர்கள் படம் பார்க்க வரும் ரசிகர்களின் சரியான எண்ணிக்கையில் அரசுக்கு வரி செலுத்துவதில்லை. அவர்கள் எண்ணிக்கையை குறைத்துக் காட்டித்தான் வரி செலுத்தி வருகிறார்கள். இதனால் அரசுக்கு மிகப்பெரிய அளவில் வரி இழப்பு ஏற்படுகிறது என்று பல ஆண்டுகளாகவே சினிமா ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
லேட்டஸ்ட்டாக ரஜினியின் ‘லிங்கா’ படத்துக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் வந்தும் கூட அந்தப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்று வினியோகஸ்தர்கள் குற்றம் சாட்டினர். இதன் பின்னணியில் தியேட்டர் உரிமையாளர்கள் கள்ளக் கணக்கு காட்டியிருப்பது நேற்று நடந்த தியேட்டர்கள் ரெய்டில் அம்பலமாகியுள்ளது.
அஜித்தின் ‘என்ன அறிந்தால்’ படத்தின் முதல்நாள் வசூல் 13 கோடி வரை தமிழ்நாட்டிலுள்ள தியேட்டர்களுக்கு வந்திருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.இதையடுத்து ஒவ்வொரு வாரமும் கடைசி தினத்தில் அரசுக்கு வரி செலுத்தும் தியேட்டர் உரிமையாளர்கள் என்னை அறிந்தால் படத்துக்கு வரி செலுத்திய போது சில ஆயிரங்களை மட்டுமே வரியாக செலுத்தினார்களாம்.
இதனால் சந்தேகப்பட்ட வணிகவரித்துறை அதிகார்கள் நேற்று தமிழகம் முழுவதும் சில தியேட்டர்களில் அதிரடியாக ரெய்டு நடத்தினர். இதில் சேலத்தில் 7 தியேட்டர்களிலும் மதுரையில் 8 தியேட்டர்களிலும், திருச்சியில் 6 தியேட்டர்களிலும் ரெய்டு நடத்தியதில் ரசிகர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டிய குற்றத்திற்காக சுமார் 85 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
வணிகவரித்துறையின் இந்த ரெய்டு தமிழகத்தில் உள்ள மற்ற தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
0 comments:
Post a Comment