1989ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த இந்தியாவின் சாதனை வீரர் சச்சின் டெண்டுல்கர் 2011ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை கையில் ஏந்திப் பிடித்து அழகு பார்த்தார்.
இறுதிப் போட்டிக்கு முன்பாக இது சச்சின் டெண்டுல்கருக்கான உலகக்கிண்ணம் இதை அவருக்கு வென்று அர்ப்பணிப்போம் என்று யுவராஜ்சிங் உள்ளிட்ட இந்திய வீரர்கள் சூளுரைத்தனர்.
இறுதிப் போட்டியில் ஆட்டமிழந்த சச்சின் பதற்றமடைந்த நிலையில் வெளியேற, பரபரப்பான அந்த ஆட்டத்தை பார்க்க தவிர்த்து அறையில் அடைந்து கிடந்தார். டோனியின் வெற்றிக்குரிய சிக்சரை கூட அவர் பார்க்கவில்லை.
இந்திய அணியின் வெற்றி உறுதியானதும் மைதானத்தில் துள்ளிக் குதித்து ஓடி வந்த சச்சினை சக வீரர்கள் தோளில் தூக்கி வைத்து வலம் வந்தனர். வீரர்கள் சொன்னதை செய்து காட்டியதும் சச்சினின் கண்களில் ஆனந்த கண்ணீர் துளிர்விட்டது.
இந்த தொடரில் 2 சதம் உள்பட 482 ஓட்டங்கள் எடுத்த சச்சினுக்கு இதுவே கடைசி உலகக்கிண்ணமாக அமைந்தது. 1992ம் ஆண்டு முதல் முறையாக உலகக்கிண்ணப் போட்டியில் பங்கேற்ற சச்சினுக்கு இது 6வது உலகக்கிண்ணமாக இருந்தது.
0 comments:
Post a Comment