↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சம்சுங் நிறுவனம் தற்போது E தொடர்களைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் ஈடுபட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் E5, E7 ஆகிய இரு கைப்பேசிகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் சிறப்பம்சங்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியாக அமைந்துள்ளன.

Android 5.0 Lollipop இயங்குதளத்தில் செயல்படக்கூடிய இவை 5.5 அங்குல அளவுடையதும், 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரை, 1.2GHz வேகத்தில் செயல்படக்கூடிய Quad-Core Snapdragon 410 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளன.
இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 2,950 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top