↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad அதிரடி தள்ளுபடி அறிவிப்புகள், வீட்டில் இருந்தபடியே பொருள் வாங்கும் வசதி போன்ற பல்வேறு விஷயங்கள் ஆன்லைன் வர்த்தகத்தை 
 வளரச்செய்திருக்கின்றன. கடை வாடகை, ஏசி, பராமரிப்பு செலவு, ஊழியர் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் ஆன்லைன் வர்த்தகத்துக்கு இல்லை. இதன் காரணமாக  குறைந்த விலையில் பொருட்கள் விற்பது சாத்தியமாகிறது. அதுமட்டுமின்றி சில தயாரிப்புகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஆனால்,  ஆன்லைனில் பொருட்களை நம்பி வாங்குவோருக்கு சவால் விடும் வகையில் சில சம்பவங்கள் நடந்து வருகின்றன. புனேயை சேர்ந்த தர்ஷன் கப்ரா என்பவர் ஸ்நாப்டீலில்  கடந்த 7ம் தேதி 2 ஆப்பிள் ஐபோன் 4எஸ் மொபைல்களை ஆர்டர் செய்தார். இதற்கு ஆன்லைனில் பணம் செலுத்தாமல், பொருளை கொடுத்துவிட்டு பணம் வாங்கும்  முறையை (சிஓடி) தேர்வு செய்தார். பொருளை கூரியர் ஊழியர் கொண்டுவந்து கொடுத்ததும், பணத்தை கொடுத்து விட்டு பார்சலை வாங்கினார். 





விலை அதிகமுள்ள பொருள் என்பதால் பார்சலை உடனே பிரித்து காட்டுமாறு கூறினார் கப்ரா. கூரியர் ஊழியர் பார்சலை பிரித்து கான்பித்தார். அதற்குள் ஆசையோடு  ஆர்டர் செய்த ஐபோன் இருக்கும் என்று எட்டிப்பார்த்தவருக்கு மார்பிள் கற்கள்தான் இருந்தது பெரும் அதிர்ச்சியை அளித்தது. உடனே அந்த ஊழியரிடம் பணத்தை  பெற்றுக்கொண்டு ஸ்நாப்டீல் நிறுவனத்துக்கு கடிதம் எழுதினார்.

 அதில், தான் ஆர்டர் செய்த ஆப்பிள் போனுக்கு பதிலாக மார்பிள் கல் இருப்பதை சுட்டிக்காட்டியிருந்தார். அதற்கு ஸ்நாப்டீல் நிறுவனம் மன்னிப்பு கோரி கடிதம்  அனுப்பியது. இதற்கு முன்பு வேறொரு ஆன்லைன் ஸ்டோரில் ஷூ ஆர்டர் செய்த கப்ராவுக்கு, பழைய ஷூக்கள் அனுப்பப்பட்டிருந்தன. ஸ்நாப் டீலில் சாம்சங் கேலக்சி  கோர்2 மொபைல் ஆர்டர் செய்த மற்றொரு நபருக்கு விம் பார்சோப் வந்திருந்தது. இது ஸ்நாப்டீலில் மட்டுமல்ல பிளிப்கார்ட்டிலும் நடந்துள்ளது. கடந்த மாதம் இந்த  இணையதளத்தில் பென் டிரைவ் ஆர்டர் செய்த ஒருவருக்கு வந்த பார்சலில் எதுவுமே இல்லை. பழுதடைந்த பொருட்கள் சப்ளை செய்த தும் நடந்திருக்கின்றன.

 பொதுவாக பல ஆன்லைன் ஸ்டோர்கள் அந்தந்த பகுதிகளில் இருக்கும் சில்லரை விற்பனையாளர்களையும் தன்னுடன் இணைத்துக்கொள்கின்றன. பொருட்கள் சப்ளை  செய்யும் வர்த்தகர் நம்பிக்கைக்கு உரியவராக இருக்க வேண்டும். ஆனால் இணையதள ஸ்டோர்தான் இதற்கு முழுபொறுப்பு ஏற்க வேண்டியுள்ளது. எனவே, பொருட் களை  ஆர்டர் செய்வதற்கு முன்பு, யாரிடம் இருந்து இது சப்ளை செய்யப்படுகிறது என்பதையும், அந்த பொருளை பற்றி வாடிக்கையாளர்களின் அனுபவங்க ளையும் படித்து  பார்த்து முடிவு செய்ய வேண்டும். . ஒரு காலத்தில் ‘ரேடியோ ஆர்டர் செய்தால் செங்கல் வரும்‘ என்று பயந்தவர்கள் கூட இன்று ஆன்லைனில் பொருள் வாங்க துணிந்து  இறங்குகின்றனர். இத்தகைய சம்பவங்கள் இந்த நம்பிக்கைக்கு வேட்டு வைப்பதாக இருக்கின்றன.


 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top