↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad மின்மினிப் பூச்சிகளை பற்றி நிறையவே கேள்விப்பட்டிருப்போம், நிறைய பேர் பார்த்திருக்கவும் வாய்ப்புகள் உண்டு.
அது எப்படி இந்த பூச்சி மட்டும் பிரகாசமாக ஒளிர்கிறது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது உண்டு.
மின்மினிப் பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்று அழைக்கிறார்கள், Coleopteran என்ற குடும்பத்தைச் சேர்ந்தது.
இப்பூச்சி ஒளிர்வதற்கு காரணம் லூசிஃபெரின்(luciferin என்ற இரசாயன கூட்டுப் பொருள் ஆகும்.
இது பூச்சியின் ஒளியுமிழ் உறுப்பில்(light emitting organ) நிறைந்துள்ளது.
இந்த லூசிஃபெரின், லூசிஃபெரெஸ் என்ற என்ஸைமில் உள்ள ஆக்சிஜன் மற்றும் செல்களில் உள்ள ATP மற்றும் மக்னீசியம் ஆகியவற்றுடன் சேரும்போது ஒளி உண்டாகிறது.
இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிடினும் ஒளியுண்டாகாது. மின்மினிப் பூச்சி விட்டுவிட்டு ஒளிர்வதற்குக் காரணம், அதன் ஒளியுமிழ் உறுப்புக்குச்(light emitting organ) செல்லும் நரம்புத் தூண்டல்கள்(nerve impulses) விட்டு விட்டுச் செல்வதேயாகும்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top