↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய விண்வெளி சாதனைகள் இரண்டு 2014ல் இடம்பெற்றுள்ளன.
இனிவரும் அரை நூற்றாண்டுகளிற்கு வெற்றியைத் தவிர வேறொன்றில்லை என்ற உயர்ந்த ஸ்தானத்தில் அமெரிக்காவை வைத்திருப்பதற்கான வழியை ஒரியோன் கலம் செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களைச் சுமந்து செல்லும் நிகழ்வு ஏற்படுத்தப் போகிறது.
அதே போன்று மனிதனின் கற்பனைக்கு எட்டாதவகையில் 500 மில்லியன் மைல்கள் ஒரு தானியங்கிக் கலத்தைப் பயணிக்க வைத்து வால்நட்சத்தில் அதனை இறக்கி ஐரோப்பா சாதனை படைத்துள்ளது.
அமெரிக்காவின் நாசாவால் ஏவப்பட்ட ஓரியன் என்ற விண்கலத்தைப் பற்றிதான ஒரு பார்வையையும் அதேபோல ஐரோப்பிய ஒன்றியத்தால் அனுப்பப்பட்ட றொசற்றா என்ற செய்மதியைப் பற்றியதுமான ஆய்வாகவும் இருந்த நிஜத்தின் தேடலில் ஆய்வாளர் சுரேஸ் தர்மா இவ்வாறு தெரிவித்தார்.
அமெரிக்கா சலஞ்சர், டிஸ்கவரி, அட்லான்டிஸ், என்டோவர், கொலம்பியா என ஐந்து கலங்கள் இவ்வாறு விண்ணிற்கு சென்று மீண்டு வருவதற்கு அமெரிக்கா 2011 வரை உபயோகித்திருந்தது.
அதன்அடுத்த கட்ட கண்டுபிடிப்பே இந்த ஒரியோன் கலமாகும். இது 2020ல் விண்வெளி வீரர்களைச் சுமந்து செல்லப் போகின்றது.

முதற்கட்டமாக இந்த ஒரியோன் வீரர்கள் விண்வெளி எரிகல் ஒன்றில் அந்தப் பயணத்தின் போது கலத்தைத் தரையிறக்கப் போகிறார்கள். 
இந்த ஒரியோன் கலம் பரீட்சார்த்தப் பறப்பில் விண்வெளி ஆய்வு மையத்தைத் தாண்டி அதனை விட பதினைத்து மடங்கு உயரத்திற்கு சென்று திரும்பியது.
விண்வெளி ஆய்வு மையம் பூமியிலிருந்து 250மைல் உயரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறது. இந்த வின்ஊர்த்தி 3,600 மைல்கள் உயரம் சென்று நான்கரை மணி நேரத்தில் பூமியை வந்தடைந்திருக்கிறது. 

றொசற்றே மிசன் என்பது 10 வருடங்களிற்கு முன்பு ஏவப்பட்ட ஒரு கலம் அதன் நோக்கம் ஒரு வால் நட்சத்திரத்தில் தரையிறங்குவது.
இதற்கு முன்பு யாருமே முன்னெடுக்காத ஒரு முயற்சி. தெரியாதஒரு வால்நட்சத்திரம். 1.3 பில்லியன் யூரோக்கள் செலவில் 2004ம் ஆண்டில் ஏவப்பட்டது.

10 வருடங்கள் 500 மில்லியன் மைல்கள் பயணம் செய்து அந்த வால்நட்சத்திரத்தில் 2014ம் ஆண்டு இறக்குவது என்பது உலக வரலாற்றில் இன்றைய அதிசயம் என்பது உள்ளிட்ட பல செய்திகளை பகிர்ந்து கொண்டார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top