↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


முன்னாள் தமிழக முதல்வரும், தலைசிறந்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கே.காமராஜரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியானது என்பது அனைவரும் தெரிந்ததே. ஏ.பாலகிருஷ்ணன் இயக்கிய இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். ரிச்சர்ட் மதுரம், சம்பத்ராஜ் சுமந்த், மகேந்திரன், விஜயன் உள்பட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் தற்போது டிஜிட்டலில் தயாராகி வருகின்றது.

இந்த படத்தில் சில புதிய காட்சிகளை இணைத்து, டிஜிட்டலில் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் நடிப்பதற்காக சம்பளம் வாங்காமல் நடித்து கொடுக்க பிரபல இயக்குனர் சமுத்திரக்கனி ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சமுத்திரக்கனி, "இந்த படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்க ஒப்புக்கொண்டது பெரிய விஷயமில்லை.இந்தியாவின் கிங்மேக்கர் என்ற புகழ்பெற்ற பெருந்தலைவருக்கு இது நான் செலுத்தும் ஒரு சிறிய மரியாதைதான். இந்த படத்தில் என்னுடைய பங்கும் சிறிய அளவில் உள்ளது என்பதில் எனக்குத்தான் பெருமை; என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top