கிரன்கி செஸ்: கார்ல் சென்னிடம் ஆனந்த் தோல்வி
கிரன்கி செஸ் கிளாசிக் போட்டி ஜேர்மனியில் நடந்து வருகிறது. இதன் 4வது சுற்றில் உலக சம்பியனான கார்ல் சென் (நார்வே)– இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மோதினர். இதில் கார்ல் செனிடம் ஆனந்த் தோல்வி அடைந்தார்.
கவலையளிக்கும் இந்திய அணியின் பந்துவீச்சு
நடப்பு சம்பியனான இந்திய அணிக்கு பந்து வீச்சுதான் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. எந்த ஒரு நல்ல அணிக்கு எதிராக 300க்கு மேலான ஓட்டங்களை விட்டு கொடுக்கும் நிலையில் இந்திய அணியின் பந்து வீச்சு உள்ளது என்று அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவரும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான இயன் சேப்பல் கூறியுள்ளார்.
அரையிறுதியில் இந்திய அணி
நடைபெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டியில் இந்திய அணி நிச்சயமாக அரையிறுதிக்கு தகுதி பெறும் என்று நம்புகிறேன். குறிப்பிட்ட நாளின் ஆட்டத்தை பொறுத்தே எல்லாம் அமையும் என்று அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ஷேவாக் கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் மீது அர்ஜூன ரணதுங்காவின் குற்றச்சாட்டு
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள் அனைத்தும் மோசமாக இருப்பதாகவும், அது ஒரு பல் இல்லாத சிறுத்தையை போல் நடந்து கொள்வதாகவும் இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்கா குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கை ஒரு அனுபவ அணி: டிராவிட்
இலங்கை அணி மிரட்டல் அணியாக இருக்கிறது. நல்லவொரு உலகக்கிண்ண தெரிவு இலங்கை அணியில் செய்யப்பட்டுள்ளது. சங்கக்காரா, ஜெயவர்த்தனே, டில்ஷான் போன்ற அனுபவ வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர் என்று முன்னாள் இந்திய அணித்தலைவர் டிராவிட் கூறியுள்ளார்.
இந்திய- பாகிஸ்தான் மோதலில் பரபரப்பை ஏற்படுத்தும் ஊடகம்
இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் என்னை பொறுத்தவரை அவுஸ்திரேலியா, இலங்கை அல்லது இன்னொரு டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிராக எப்படி விளையாடுகிறோமோ அதை போன்று தான். ஆனால் நீங்கள் தான் (ஊடகம்) இந்தியா-பாகிஸ்தான் இடையிலான நீண்ட பாரம்பரியமிக்க மோதல், அது, இது என்று பரபரப்பை ஏற்படுத்துகிறீர்கள். அதனால் உங்களுக்கு நீங்களே நெருக்கடியை அதிகப்படுத்திக் கொள்கிறீர்கள் என்று இந்திய அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment