↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
அயர்லாந்தில் மொழி தெரியாத பெண் ஒருவருக்கு கூகுள் டிரான்ஸ்லேட்டர் உதவியோடு பிரசவம் பார்த்துள்ளனர் புத்திசாலி செவிலியர்கள் இருவர். அயர்லாந்தில் வாழ்ந்து வரும் காங்கோ நாட்டுப் பெண் ஒருவர் பிரசவத்திற்காக கார்க் பலகலைக்கழக மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப் பட்டார். அவருடன் ஆம்புலன்சில் ஹெர்ரி மற்றும் ஷேன் என்ற இரண்டு செவிலியர்கள் பயணம் செய்தனர். அவர்கள் இருவருக்கும் ஆங்கிலம் மட்டுமே தெரியும். ஸ்வாகிலி மொழி தெரியாது. ஆனால், கர்ப்பிணிக்கோ ஸ்வாகிலி மொழி மட்டுமே தெரியும்.
இந்நிலையில், மெக்ரோமுக்கும், லிஸ்ஸார்டாவுக்கும் இடைப்பட்ட சாலையில் சென்று கொண்டிருந்த போது கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்தது. உடனடியாக பிரசவம் பார்த்தால் மட்டுமே தாய்க்கும், சேய்க்கும் நலம் என்ற நிலை. ஆனால், அப்பெண் பேசுவது செவிலியர்களுக்குப் புரியவில்லை.
உடனடியாக சாமர்த்தியமாக சிந்தித்து செயல்பட்டனர் அந்த செவிலியர். தனது போனில் உள்ள கூகுள் டிரான்ஸ்லேட்டர் உதவியுடன் ஸ்வாகிலி மொழியை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து அப்பெண்ணுடன் பேசி, பிரசவம் பார்த்தனர். அவர்களது முயற்சி வீணாகவில்லை. அப்பெண்ணிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. சாமர்த்தியமாக தக்க நேரத்தில் இணையத்தின் உதவி கொண்டு செயல்பட்ட அந்த இரண்டு செவிலியர்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment