↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய்யின் புலி படத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன் நடிப்பதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லையாம். சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் புலி. ஹன்சிகா, ஸ்ருதி ஹாஸன் என படத்தில் இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். அதில் ஸ்ருதி விஜய்யுடன் சேர்ந்து ஒரு பாடலை பாடியுள்ளார்.

புலி படத்தில் பரோட்டா சூரி, சத்யன், கருணாஸ் என காமெடி பட்டாளமே உள்ளது. இந்நிலையில் பவர்ஸ்டார் சீனிவாசன் புலி படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஐ படத்தை அடுத்து பவர்ஸ்டார் விஜய் படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. பவர் ஸ்டார் தவிர நான் கடவுள் ராஜேந்திரனும் புலி படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் பவரும், ராஜேந்திரனும் விஜய் படத்தில் நடிக்கவில்லை என்று படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். விஜய் புலியை முடித்த கையோடு அட்லீயின் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top