↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கி வைத்திருக்கும் 60 பேருக்கு எதிராக நடவடிக்கையை தொடங்கியது மத்திய அரசு. இவ்வாறு சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் சட்ட விரோதமாக பதுக்கிய பணம் ரூபாய் 1500 கோடியை தாண்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
60 பேர் கொண்ட பட்டியலில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தொடர்பானவர்களும் அடங்குவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 60 பேர் வரி ஏய்ப்பு செய்த காரணத்தினால் மட்டுமே முதற்கட்ட விசாரணை செய்ய வருமானவரி துறையினர் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இவர்கள் மீது இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தங்களை படி, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பின்னரே தனிபட்ட விசாரணைக்கு உட்படுத்த முடியும். அதன்படியே சட்டப்படியான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம், 627 வெளிநாட்டு கணக்கு வைத்திருப்போர் பட்டியல் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பிறகு மூன்று பேர் பெயர்கள் வெளியிடப்பட்டன.
சட்டத்திற்கு புறம்பாக கணக்கு வைத்திருக்கும் 200க்கும் மேலானவர்கள் விசாரணை ஒப்புதல் கடிதத்தை நவம்பர் இறுதிக்குள் உறுதி செய்யப்படும்.அதேபோல மொத்தம் உள்ள சட்ட விரோதமாக வெளிநாட்டில் கணக்கு வைத்துள்ளவர்களில் 100 பேர் பட்டியல் சரிபார்க்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 627 கணக்குகளில் 400 பேர் இந்தியர்கள் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கறுப்பு பணம் மீட்கும் நடவடிக்கைகள் முழு அளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஏழை மனிதனின் பணத்தை ஒவ்வொரு பைசாவையும் மீட்பதில் அரசு உறுதி பூண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடியின் ஒரு நம்பிக்கை கட்டுரை உறுதிபடுத்துகிறது.
Home
»
news
»
news.india
» 60 கறுப்புப் பண முதலைகளுக்கும் ஆப்பு ரெடி! – நடவடிக்கையை தொடங்கியது மத்திய அரசு
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment