குழந்தைகள் பருவம் அடைய உயிருக்கு ஆபத்தான ஆக்சிடோசின் ஊசியை விபச்சார கும்பல் பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. |
ஜம்முவில் உள்ள அனுமதி பெறாத மருந்து கடை ஒன்றில் பெருமளவிலான ஆக்சிடோசின் கைப்பற்றப்பட்டது. இதன் மூலம், இது தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் விரைவில் குழந்தை பெறவும் இந்த ஊசி பயன்படுத்தப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான ஆக்சிடோசின் இன்ஜக்சன் (ஊசி) இந்தியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ஊசியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளை, பருவம் அடைய வைக்க விபச்சார கும்பல் பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென் இந்தியாவில் தர கட்டுப்பாட்டு அமைப்பு நடத்திய ஆய்வில், 40 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு இந்த ஊசி செலுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், சிகப்பு விளக்கு பகுதிகளான ராஜஸ்தானில் உள்ள சோடாவாஸ் மற்றும் கிர்வாஸ் கிராமங்களில் 10 வயதே நிரம்பிய குழந்தைகளுக்கு இந்த ஊசி செலுத்தப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து இந்த ஊசி விற்கப்படுவதை விழிப்புடன் கண்காணித்து தடுக்கவேண்டும் என்று மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு வலியுறுத்தியுள்ளது. |
குழந்தைகள் பருவம் அடைய ஆக்சிடோசின் ஊசியை பயன்படுத்தும் விபச்சார கும்பல்
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment