↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சேலம் மாவட்டத்தில் ஒரு விவசாயி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொடுத்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. தனக்கும், தனது மனைவிக்கும் திருமணமாகி ஒன்றரை வருடங்களாகியும் இதுவரை முதலிரவே நடக்கவில்லை என்றும், இந்த நிலையில் தனது மனைவி வீட்டார் பணம் கேட்டு தன்னை மிரட்டுவதாகவும், விவாகரத்து கொடுக்கக் கோரி மிரட்டுவதாகவும் புகார் கூறியுள்ளார் அந்த விவசாயி. சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பெரிய கிருஷ்ணாபுரம் மத்தூர் வடக்குகாடு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.

அதில் அவர் கூறியிருந்தது: 
எனக்கும் ஆத்தூர் அருகே உள்ள சார்வாய்புதூரை சேர்ந்த ரங்கநாதன் என்பவரது மகள் சோலையம்மாள் (28) என்பவருக்கும் கடந்த 15.11.2013 அன்று திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் சோலையம்மாளை எங்கள் வீட்டிற்கு முறைப்படி அழைத்து வந்தோம். அன்றைய தினம் நடக்க வேண்டிய சாந்திமுகூர்த்தம் எங்களுக்குள் நடக்கவில்லை. 

மேலும் சோலையம்மாள் யாரிடமும் பேசாமல் இருந்தார். அவருக்கு சமைக்கவும் தெரியவில்லை. தாம்பத்ய உறவு பற்றிய எந்த விவரமும் தெரியாமல் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். இதையடுத்து திருமணம் முடிந்து 3 நாட்கள் மட்டுமே வீட்டில் இருந்து விட்டு சோலையம்மாள் அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

அந்த நேரத்தில் எனது தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் நாங்கள் ஆஸ்பத்திரியில் வைத்து அவரை கவனித்து கொண்டோம். பின்னர் மீண்டும் சென்று சோலையம்மாளை அழைத்து வந்தேன். அப்போதும் 3 நாட்கள் மட்டுமே இருந்து விட்டு மீண்டும் சென்று விட்டார். 

எங்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலையில் பெண் வீட்டார் அடிக்கடி ரூ. 5 லட்சம், ரூ. 10 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். நான் விவாகரத்து கேட்டு பத்திரத்தில் கையெழுத்து போட சொன்னால் மிரட்டுகிறார்கள். எனவே துரித நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு தாருங்கள். 

திருமணமாகி ஒன்னேகால் ஆண்டு ஆகியும் எங்களுக்குள் முதரலிவு நடக்கவில்லை. சோலையம்மாள் எனக்கு ஒரு டீ கூட போட்டு தராத நிலையில் எப்படி நான் ரூ. 5 லட்சம் கொடுக்க முடியும் என்றார் அவர். இப்படிக் கூறும்போது அவர் கண் கலங்கிக் காணப்பட்டார்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top