↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற 'பிகே' படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் நடிக்கவுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அனைவரும் அறிந்ததே. ஜெமினி இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பெற்றுள்ள ஜெமினி நிறுவனம் இதற்கு முன்னர் ராஜ்குமார் ஹிரானி இயக்கிய முன்னாபாய் எம்.பி.பி.எஸ், மற்றும் 3 இடியட்ஸ் ஆகிய திரைப்படங்களின் தமிழ் உரிமைகளையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் இயக்குனரை கமல்ஹாசனே முடிவு செய்வார் என்று ஜெமினி நிறுவனம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அமீர்கான் கேரக்டரில் கமல் நடிக்கவுள்ள நிலையில் மற்ற கேரக்டர்களில் நடிப்பவர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என தெரிகிறது.
இந்நிலையில் 'பிகே' திரைப்படம் கடவுள் குறித்த சர்ச்சைக்குரிய விவாதம் குறித்த கதை என்பதால் நிஜவாழ்வில் நாத்திகராக வாழ்ந்து வரும் கமல், இந்த படத்தில் நடிப்பது மிகப்பொருத்தமாக இருக்கும் என சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment