↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
இந்தியாவில் சூப்பர் ஹிட் ஆன திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம், அமிதாப் பச்சன், தர்மேந்திரா நடித்த ஷோலே. இந்த திரைப்படம் நாற்பது ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானில் முதல்முறையாக ரிலீஸ் ஆகவுள்ளது.
பாகிஸ்தான் மக்கள் இதுவரை ஷோலே படத்தை டிவிடியில் மட்டுமே பார்த்திருக்கின்றனர். பெரிய திரையில் இதுவரை பார்க்காத ஷோலே படத்தை வரும் மார்ச் மாதம் 20ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த தகவலை கராச்சியில் உள்ள மண்டிவாலா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனரும், பாகிஸ்தானில் பிரபல விநியோகிஸ்தருமான நதீம் மண்டிவாலா தெரிவித்துள்ளார். 1975ஆம் ஆண்டு ரிலீஸான இந்த திரைப்படம் வரும் மார்ச் 20 ஆம் தேதி முதல்முறையாக 2D மற்றும் 3D யில் ரிலீஸ் செய்யவிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
தர்மேந்திரா, அமிதாப் பச்சன், ஹேமாமாலினி, அம்ஜத்கான், சஞ்சீவ்குமார், மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை ரமேஷ் சிப்பி இயக்கியிருந்தார். அவரது தந்தை ஜி.பி.சிப்பி இந்த படத்தை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment