↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அஜித் நடிக்க உள்ள படத்தை வீரம் படத்தை இயக்கிய சிவா இயக்க உள்ளார். இந்த படத்தில், அஜித் ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகளிடையே கடும்போட்டி நிலவிவருகிறதாம். வீரம் படத்தில், தமன்னாவும், என்னை அறிந்தால் படத்தில் அனுஷ்கா, த்ரிஷா நடிப்பதாலும்அவர்கள் இந்த போட்டியில் இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். அதே சமயம், மற்ற முன்னணி நடிகைகளான நயன்தாரா, ஸ்ருதிஹாசன், சமந்தா, ஹன்சிகா, காஜல் அகர்வால் போன்றவர்களில், யாராவது ஒருவர்தான் அவருடைய ஜோடியாக நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

அஜித்தும், நயன்தாராவும் ஏற்கெனவே “பில்லா, ஏகன், ஆரம்பம்” ஆகிய படங்களில் ஜோடியாக நடித்து விட்டனர். அதனால், அவருக்கு வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும். மற்றவர்கள் இதுவரை அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடித்ததில்லை. தமிழில் இன்றைய சூழ்நிலையில் அதிக ரசிகர்களைக் கொண்டிருப்பவர்களாக விளங்கிவரும் அஜித், விஜய் ஆகியோரது படங்களில் நடிப்பதை தான் இன்றைய இளம்ஹீரோயின்கள் விரும்புகிறார்கள்.

ஹன்சிகா, காஜல் அகர்வால் இருவருமே விஜய்யுடன் ஜோடியாக நடித்துவிட்டார்கள். ஸ்ருதிஹாசன், விஜய்யின் புதிய படத்தில் அவருடன் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஆக, இவர்கள் மூவருமே அஜித்துடன் இன்னும் ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை. இவர்களில், ஒருவர் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடித்தால் புதுஜோடியாகத் தெரிவார்கள். பொதுவாக, ஹீரோயின்கள் விஷயத்தில் அஜித் தலையிடமாட்டார் என அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்வார்கள்.

இயக்குனர் சிவா, அவர்களில் ஒருவரைத் தேர்வுசெய்வாரா அல்லது... புதிதாக ஒருநடிகையைக் கொண்டுவருவாரா என்பது இன்னும் சிலவாரங்களில் தெரிந்துவிடும்.

..........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top