↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சூப்பர் ஸ்டார் என்றும் தமிழ் சினிமாவில் நம்பர் 1 தான். ஆனால், தற்போதுள்ள இணைய உலகத்தில் அவரது ரசிகர்களால் போட்டி போட முடியுமா என்றால் கேள்விக்குறி தான்.

ஏனெனில் விஜய்-அஜித் ரசிகர்களின் பலம் நெட்டில் கொடி கட்டி பறக்க ரஜினி ரசிகர்களால், அவர்கள் இடத்தை பிடிப்பது என்பது கடினம் தான்.கத்தி டீசர் வெளியான ஒரு நாளில் 10 லட்சம் ஹிட்ஸை தாண்டியது. அதேபோல் தான் அஜித்தின் ஆரம்பம், பில்லா-2 போன்ற படங்கள். ஏன் தனுஷ் படம் கூட எளிதில் 10 லட்சம் ஹிட்ஸை தாண்டுகிறது.

இந்நிலையில் நேற்று ரிலிஸான லிங்கா படத்தின் ட்ரைலர் வெளியாக ஒரு நாளை கடந்து விட்டது. ஆனால், இன்னும் 9 லட்சம் ஹிட்ஸை கூட தொட முடியவில்லை. இதை வைத்துக் கொண்டு சூப்பர் ஸ்டார் பலத்தை குறைத்து எடை போடவும் முடியாது.இன்றும் இந்தியாவில் அதிக வசூல் படங்களில் எந்திரன் முதல் 5 இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதுவரை எந்த தமிழ் படமும் இந்த ரெக்கார்டை முறியடிக்கவில்லை.இந்த சாதனையை மீண்டும் லிங்கா மூலமாகவே முறியடிக்க காத்திருக்கிறது திரையுலக சிங்கம். அவரது ஸ்டையிலேயே சொல்ல வேண்டும் என்றால் சீ யூ சூன்.
...............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top