↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சக ஹீரோயின்கள் மீது திடீர் பாசம் காட்டுகிறார் காஜல் அகர்வால். நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா, காஜல் அகர்வால், தமன்னா, ஹன்சிகா போன்ற டாப் ஹீரோயின்கள் கடந்த ஆண்டுவரை போட்டி நாயகிகளாக வலம் வந்துக்கொண்டிருந்தனர். ஒருவரையொருவர் சந்திப்பதை தவிர்த்ததுடன், ஒரே படத்தில் இணைந்து நடிக்கவும் தயக்கம் காட்டினர். இது தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் சாதகமாகவே இருந்தது. ஒருவரை பற்றி ஒருவரிடம் வம்பளந்து கால்ஷீட் பெற உதவியாக இருந்தது. இதை புரிந்துகொண்ட ஹீரோயின்கள் திடீரென்று நட்பு பாராட்டத் தொடங்கினர். எலியும் பூனையுமாக இருந்த திரிஷா, நயன்தாரா திடீர் தோழிகளாகிவிட்டனர். அதேபோல் அனுஷ்காவுடன் சேர்ந்து படங்களில் நடிக்க தமன்னா முன்வந்தார்.

இந்த தோழிகள் வட்டத்துக்குள் காஜல் அகர்வால் நுழைய முடியாமல் தனித்து விடப்பட்டிருந்தார். அவர்களுடன் இணைவதற்கு சரியான நேரம் பார்த்திருந்தவருக்கு ருத்ரம்மாதேவி படம் உதவி இருக்கிறது. இப்படத்தின் இயக்குனர் குணசேகரை பாராட்டும் சாக்கில் அனுஷ்காவுக்கு ஐஸ் வைத்திருக்கிறார் காஜல். இயக்குனர் குணசேகருக்கு இப்படம் சரித்திரத்தில் ஒரு இடத்தை பிடித்துக்கொடுக்கும் படமாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அதேபோல் அனுஷ்காவுக்கும் பெரிய அளவில் வெற்றியாக இருக்கும். இப்படத்தை பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன் என்று இருவருக்கும் மெசேஜ் அனுப்பி இருக்கிறார். அனுஷ்கா நட்பு மூலம் சினிமா தோழிகள் வட்டத்துக்குள் நுழைய முடிவு செய்திருக்கிறாராம் காஜல் அகர்வால். 

...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

https://www.facebook.com/pages/Tamil-Excellent-News/920381617976801

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top