↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

யான் கதை ஹாலிவுட் படத்தை பார்த்து காப்பி அடிக்கப்பட்டதா என்றதற்கு பதில் அளித்திருக்கிறார் இயக்குனர் ரவி கே. சந்திரன். ஜீவா&துளசி நடித்த படம் யான். ரவி கே. சந்திரன் இயக்கி இருந்தார். எல்ரெட் குமார் தயாரித்திருந்தார். இப்படம்பற்றி குமார் கூறும்போது, 1972ம் ஆண்டு வெளியாகி ஆஸ்கர் விருது வென்ற மிட்நைட் எக்ஸ்பிரஸ் என்ற ஹாலிவுட் படத்தின் கதையைத்தான் ரவி கே. சந்திரன் யான் படமாக எடுத்திருக்கிறார். அப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள், வசனங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. ஆனால் இப்படத்தை சில வருடங்களுக்கு முன் எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருப்பதாக இயக்குனர் கூறினார். அவர் புகழ்பெற்ற கேமராமேன்.

அமிதாப்பச்சன் போன்ற பெரிய நடிகர்களுடன் பணியாற்றியவர் என்பதால் அவர் மீது எங்களுக்கு சந்தேகம் எதுவும் எழவில்லை. படத்தை தயாரித்தோம். இந்த விஷயத்தில் நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம். இதுதொடர்பாக ரவி கே. சந்திரனிடம் பேச தொடர்பு கொண்டபோது எங்கள் போன் அழைப்பை அவர் எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தர அணுகி இருக்கிறோம் என்றார். இந்த விஷயம் குறித்து ரவி கே. சந்திரனிடம் கேட்டபோது, தற்போது  நான் மும்பையில் இருக்கிறேன். என்னை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பது சரியல்ல. அவர்கள் என்னை தொடர்பு கொண்டபிறகு குற்றச்சாட்டு பதில் அளிப்பேன். Ôமிட்நைட் எக்ஸ்பிரஸ் என்ற படத்தை நான் பார்த்ததே இல்லை என்றார். 

...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

https://www.facebook.com/pages/Tamil-Excellent-News/920381617976801

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top