↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


நேற்றைய ‘லிங்கா’ விழாவில் ரஜினிக்கு முன்பாகவே நன்றியுரையாற்றினார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.
அப்போது ‘லிங்கா’ படத்தில் பணியாற்றிய அனைவரின் பெயர்களையும் எழுதி வைத்திருந்த ஒரு பேப்பரை கையில் வைத்துக் கொண்டு அனைவரின் பெயரையும் வரிசையாகக் குறிப்பிட்டபடியே வந்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றியினைத் தெரிவித்தார்.
அப்போது ஜிம்மி ஜிப்பின் ஆபரேட்டர் ஜவஹரை பற்றி ஒரு விஷயத்தைச் சொன்னார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.
‘ஒரு நாள் மழையில் ரஜினி ரயில் பக்கத்தில் நடந்து வருவது போல ஒரு காட்சியை படமாக்க நினைத்தோம். செயற்கை மழையை உருவாக்கி அதில் ஜிம்மி ஜிப் கேமரா வைத்து எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
அப்போது நிஜமாகவே மழை பெய்ய ஆரம்பித்தது. அப்போது பெய்த மழையில் ஒயர்கள் எல்லாம் தண்ணீரில் நனைந்துவிட்டன. இதை நாங்கள் கவனிக்கவில்லை.
இந்த நேரத்தில் நானும் ஸ்டார்ட் ஆக்சன் சொல்லிட்டேன். ரஜினி ஸாரும் நடக்க ஆரம்பிச்சிட்டார். ஜிம்மி கேமரா வேகமாகப் போய்க் கொண்டிருந்தது.
டெக்னீஷியன் சைட்ல இருந்து ஒரே சத்தம். ரயிலுக்கு மறுபக்கம் இருந்ததால என்னால அதைக் கவனிக்க முடியலை.. அதுனால என் பாட்டுக்கு, “மழை அந்தப் பக்கம், கேமரா இந்த பக்கம், அந்தப் பக்கம்” என்று கூறிக் கொண்டேயிருந்தேன். பாட்டு வேறு ஒரு பக்கம் ஒடிக் கொண்டிருக்கிறது.
அப்போது யாரும் எதிர்ப்பாரதவிதமாக ஷாக் அடித்ததில் ஜிம்மி கேமராவை ஆப்ரேட் செய்த ஜவஹர் தூக்கி வீசப்பட்டார். அப்போது, ரஜினி இருந்த பக்கமாக கிரேன் போய்க் கொண்டிருந்தது.  ஷாக் அடித்து விழுந்த நிலையிலும் சட்டென்று எழுந்த ஜவஹா் ஓடிச் சென்று கிரேனைப் பிடித்து நிப்பாட்டினார். இல்லைன்னா என்னாயிருக்கும்..? ஜவஹருக்கு எனது இதயங்கனிந்த நன்றி..” என்றார்.
இப்படி சொன்னாலும் சட்டென்று கண் கலங்கி அழுக ஆரம்பித்துவிட்டார். 2 நிமிடங்களுக்கு சகஜ நிலைமைக்கு வர முடியாமல் தடுமாறி பின்புதான் பேசவே துவங்கினார்.
பொதுவாகவே கே.எஸ்.ரவிக்குமார் ஷூட்டிங் ஸ்பாட்டில் கடுமையாக உழைப்பார். அதே நேரத்தில் உதவியாளர்களை கடுமையாகக் கண்டித்து பேசுவார். இது அனைவருக்குமே தெரியும். கூடவே இப்படியொரு குணமும் உண்டு என்பதை பலருக்கும் தெரிந்திருக்காது.. நேற்றைக்கு அறிந்து கொண்டார்கள்..!
...............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top