↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சமூக வலைத்தளங்கள் முழுவதும் நேற்றுமுதல் பரபரப்பாகிவிட்டன, காரணம் வேறு ஒன்றுமில்லை தல அஜித் நடிக்கும் "என்னை அறிந்தால்" பட டீசர் இன்று வெளியாகவுள்ளது என்ற நம்பிக்கை.

ஆனா, இந்த செய்தி சம்பந்தப்பட்ட படக்குழுவினரால் இதுவரை உறுதிசெய்ப்படவே இல்லை. ஆனா, ஜனவரி 8 இல் படம் ரிலீசாகும் என்ற நிலையில் இன்னும் டீசர், ட்ரெயிலர், ஆடியோ எதுவுமே இதுவரை ரிலீசாகவில்லை. அதுபோக நேற்றையதினம் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகலாம் என்றமாதிரி எல்லாம் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகின.

இது எந்தளவுக்கு உண்மையென்று தெரியவில்லை, அவர்கள் முதலே சொன்னதுபோல் பொங்கலை(ஜனவரி 8) அண்மித்து படம் ரிலீசாகுமானால் இன்றையதினம் டீசர் வெளிவர சாத்தியப்பாடுகள் கூட. காரணம் தயாரிப்பாளர் ரத்னம் "வியாழக்கிழமை" சென்டிமென்ட் பார்ப்பவராவார். இன்று நள்ளிரவு(நாளை) தவறினா அவரின் செண்டிமெண்ட் படி அடுத்த வியாழனே சாத்தியம். இன்னும் படம் ரிலீசாக கிட்டத்தட்ட 40 நாட்களே உள்ள நிலையில் இன்னமும் டீசர் வெளியீட்டை தள்ளிப்போடுவது அவ்வளவு நல்லதா இல்லை.


ஆகவே இன்று நள்ளிரவு வரை பொறுத்திருந்து பார்த்தல் அல்லது யாரவது படக்குழுவினரின் அதிகாரபூர்வ தகவல் வந்தால்தான் உறுதிபட எதுவும் சொல்லமுடியும். ஆகவே ரசிகர்கள் ரிலாக்ஸா இருங்கள். இதுபற்றிய செய்திகள் வந்தால் உடனுக்குடன் எமது தளத்தில் இதுபற்றி தெரிவிப்போம்.
.........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

........................................................................................................... 

1 comments:

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top