↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தமிழ் சினிமா ரசிகர்கள் ஒரு சில படங்களை மட்டும் அதிக அளவில் எதிர்பார்த்து காத்திருப்பார்கள், அப்படி ஒரு மூன்று மாதமாக காத்திருக்கும் படங்கள் தான் லிங்கா, ஐ, அனேகன். இன்றைய தமிழ் சினிமாவில் ஒரு படம் எப்படி ஓடும் என்பதை அதன் டீஸர் மற்றும் டிரைலருக்கும் கிடைக்கும் வரவேற்ப்பை வைத்தே கண்டுபிடுத்துவிடலாம்.
அந்த வகையில் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள லிங்கா படத்தின் டிரைலர் 3 வாரத்தில் 3 கோடியே 90 லட்சத்திற்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது.
அதே போல் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ஐ படத்தின் டிரைலர் 2 மாதத்தில் 8 கோடியே 60 லட்சத்திற்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள அனேகன் படத்தின் டிரைலர் சமீபத்தில் தான் ஒரு கோடிக்கும் மேல் பார்க்கப்பட்டது.
இந்த மூன்று படத்தின் வெளியீட்டு தேதியும் ஏற்கனவே அறிவிக்கபட்டுவிட்டதால் இதன் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. லிங்கா படம் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் தினமான 12ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது, விக்ரமின் ஐ ஜனவரி 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
.........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

........................................................................................................... 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top