↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அமராவதி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அஜித் பவித்ரா, ஆசை, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் வாலி போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். 1999 ஆம் ஆண்டு அமர்க்களம் பட பிரமாண்ட வெற்றிக்குபிறகு மாஸ் ஹீரோவாக உருவெடுத்த அஜித்துக்கு 2001 பொங்கலுக்கு வெளியான தீனா படம் மாபெறும் வெற்றியை பெற்றுதந்தது.

அதன் பிறகு அவருக்கு பொங்கலில் வெளியான படங்கள் 2002ல் ரெட், 2006ல் பரமசிவன், 2007ல் ஆழ்வார், 2014ல் வீரம், 2015ல் தற்போது என்னை அறிந்தால். இந்த ஐந்து படங்களில் அஜித்துக்கு வீரம் மட்டுமே வெற்றியை பெற்று தந்தது. ஆழ்வார் படுதோல்வி, ரெட் தோல்வி/அவரேஜ். பரமசிவன் அவரேஜ்(அவரேஜ் ஆயினும் அந்த பொங்கலில் விஜயின் ஆதியுடனான பலப்பரீட்சையில் பரமசிவன் வெற்றி பெற்றது) மொத்தத்தில் அஜித்துக்கு பொங்கல் வெளியீடு திருப்திகரமான பெறுபேற்றை கொடுத்ததல்ல. ஆனா, ஒரே ராசி என்னவெனில் பொங்கல் ரேசில் மூன்று முறை சக போட்டியாளர் விஜயை தோற்கடித்துவிட்டார்... (தீனா- பிரண்ட்ஸ்........ பரமசிவன்-ஆதி........ வீரம்-ஜில்லா). ஒருதடவை தோல்வி(போக்கிரி-ஆழ்வார்).


அந்த வரிசையில் இந்த என்னை அறிந்தால் வெற்றி பட லிஸ்டில் இணையுமா…இல்லையா..??? என்பது தான் தற்போதைய நிலைமை. அதே போல என்னை அறிந்தால் படம் சரியாக பொங்கல் அன்று வெளியாக போவதில்லை, ஒரு வாரத்திற்கு முன்பாக ஜனவரி 8ம் தேதி வெளியாகிறது என்பதால் அஜித்திக்கு ஹாட்ரிக் வெற்றியை(ஆரம்பம்...வீரம்....) பெற்று தரும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
.........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

........................................................................................................... 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top