↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபுவுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற பல முன்னணி நடிகைகள் போட்டி போட்டு கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் மகேஷ் பாபுவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் கோலிவுட்டின் அடுத்த சூப்பர் ஸ்டாருக்காக உதாசினப்படுத்தியுள்ளார் ஸ்ருதி ஹாசன்.
கொரட்டலா சிவா இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் இன்னும் பெயர் வைக்கப்படாத படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு 20சதவீதம் படப்பிடிப்பு முடிந்து விட்டது.
இந்நிலையில் விஜய் நடித்து வரும் மாரீசன் படத்திற்கு அதிக நாட்கள் கால்ஷீட் தேவைப்பட்டதால் மகேஷ்பாபு படத்தில் இருந்து விலகுவதாகவும், அந்த படத்திற்காக வாங்கிய அட்வான்ஸ் தொகை முழுவதையும் திருப்பி கொடுத்துவிடுவதாகவும் ஸ்ருதிஹாசன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதனால் மகேஷ்பாபு உள்பட படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் ஒருசில ஊடகங்களில் சமீபத்தில் தெலுங்கு படவுலகம் விஜய் மீது தடை விதித்ததால் அதிருப்தி கொண்ட ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் இருந்து விலகியதாகவும், விஜய் மீதான தடை விலகும்வரை இனி தெலுங்கு படங்களில் நடிக்க மாட்டேன் என அவர் கூறியதாகவும் செய்தி வெளியிட்டிருந்தன.
.........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

.......................................................................................................


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top