↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கும் இன்னும் பெயரிடாத படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இவருக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் அனுஷ்கா நடிக்கின்றனர். இந்த படத்தை ஏ.எம் ரத்னம் தயாரிக்கிறார்.
கடந்த ஆண்டு வெளியான ஆரம்பம் படத்தையும் இவர் தான் தயாரித்தார். தற்போது நடித்து கொண்டிருக்கும் படத்தையும் அவர் தான் தயாரிக்கிறார். அடுத்ததாக அஜித் நடிக்கவிருக்கும் படத்தையும் இவர்தான் தயாரிக்கப்போகிறார்.
அஜித் ஏன் இப்படி தொடர்ந்து ஒரே தயாரிப்பாளருக்கு கால்ஷீட் கொடுக்கிறார் என்று விசாரித்தால் ஏ.எம்.ரத்னம் நஷ்டத்தில் இருந்தார் அதனால் தான் இந்த தொடர் வாய்ப்பு என்று பல தகவல்கள் வெளிவந்தது. ஆனால் இதற்கு முன்பு அஜித் இப்படித்தான் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்திக்கு தொடந்து கால்ஷீட் கொடுத்து வந்தார்.
பின்பு தான் தெரிந்தது அஜித், நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தின் மறைமுக கூட்டாளி என்பது, அதே போல் ஏ.எம்.ரத்னத்துடன் அஜித் கூட்டாளியாக இருப்பாரோ என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.
.........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

.......................................................................................................

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top