↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


விஜய், விக்ரம், ஏ.ஆர்.ரகுமான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கப்பல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. வைபவ், சோனம் பஜ்வா ஜோடியாக நடித்துள்ள கப்பல் படத்தை ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் கிரிஷ் இயக்கியுள்ளார். இந்த படத்தை ஷங்கரே தயாரித்துள்ளார்.
விஜய் பேசியதாவது, “இயக்குநர் ஷங்கர் ஒரு படத்தை வாங்கி வெளியிடுகிறார் என்றால், அதற்கு மேல் அந்தப் படத்திற்கு வேறு எதுவும் தேவையில்லை என்றார். அதன் பிறகு என்னோட பெஸ்ட் பிரண்ட், பேமிலி பிரண்டுன்னா அது கென்னி. அதுதான் உங்கள் விக்ரம். இரண்டு பேரும் சந்தித்துக் கொண்டால் சினிமா பற்றி பேச மாட்டோம் அதை தாண்டி நிறைய பேசுவோம்.
அவரோட ஐ பட டீஸர் பார்த்து மிரண்டுட்டேன். மெர்சலாயிட்டேன் பாட்டை கேட்டு நான் மெர்சலாயிட்டேன் என்றார். அதன் பிறகு தன்னுடைய ஸ்டைலில் ஐ படம் பார்க்க ஐ ஏம் வெயிட்டிங் என்றார்.
விக்ரம் பேசியதாவது, விஜய் பேசின பிறகு என்னோட பெஸ்ட் பிரண்ட் யார்னு நீங்களே தெரிஞ்சிகிட்டிருப்பீங்க. அடுத்து ஷங்கர் சார். அவரோட ஒர்க் பண்றப்போ என்னை நானே மெருகேற்றிக் கொள்ள முடியுது. ஒரு நடிகன் இயக்குனர்ங்றதை தாண்டி ரெண்டுபேருக்கும் நல்ல பிரண்ட்ஷிப் இருக்கு என்றார்.
ஷங்கர் பேசியதாவது, 21 வருடமாக என்னோட பயணிக்கிற ஏ.ஆர்.ரகுமான், நான் கூப்பிட்டதும் வந்துடுறேனுங்கண்ணா என்ற வந்து நிக்குற விஜய், என்ன சொன்னாலும் அதுவா மாறி வந்து நிக்குற விக்ரம் எல்லாருமே என்னோட பிரண்ட் என்றார்.
ஏ.ஆர்.ரகுமான் பேசியதாவது, ஷங்கர் உள்பட நான் பணியாற்றுகிற அத்தனை படங்களின் இயக்குனர்களும் என்னோட பிரண்டுதான். நான் அவர்களை அப்படித்தான் பார்க்கிறேன் என்றார்.

..........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top