↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ், ஷெட்பீல்டு ஷில்டு முதல் தர போட்டியில் விளையாடிய போது பவுன்சர் பந்து தலையில் தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார்.
மயங்கி விழுந்த ஹியூக்ஸ் ஹெலிகாப்டர் மூலம் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சிட்னியில் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். காயத்தின் தீவிர தன்மையை கண்டறிந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஹியூக்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 24 மணி நேரத்துக்கு மேல் ஆனது. ஆனால் அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது.
இதுகுறித்து அவுஸ்திரேலிய அணியின் மருத்துவர் பீட்டர் புருக்னர் இன்று நிருபர்களிடம் கூறுகையில், ஹியூக்ஸ் உடல் நிலையில் எந்ந மாற்றமும் இல்லை. அவர் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது ஹெட்பீல்டு–ஹூல்டு டிராபிக்கான முதல் தர போட்டியை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இதை அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
இதற்கிடையே ஹியூக்ஸ் விரைவில் குணமடைய வீரர்கள் பிரார்த்தனை செய்துள்ளனர்.
தற்காலிக இந்திய அணியின் அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில், ஹியூக்ஸ் உடல் நலம் தேற பிரார்த்தனை செய்கிறோம் என்று கூறியுள்ளனர்.
இங்கிலாந்து அணித்தலைவர் குக் கூறுகையில், நாங்கள் இந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். அவருக்கு எதிராக சில போட்டிகளை விளையாடியுள்ளோம். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தணை செய்து கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
இலங்கை வீரர் லஹிரு திரிமன்னே, நாங்கள் விடயத்தை கேட்டதும் உறைந்து போய்விட்டோம். அவர் ஒரு அதிரடி வீரர். கண்டிப்பாக அவர் முழுவதும் குணமடைந்து வர வேண்டிக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
25 வயதான ஹியூக்ஸ் 26 டெஸ்ட், 25 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு டி20 ஆட்டத்தில் விளையாடி உள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top