↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad கூகுளின் Chromebook கணனிகள் மந்த வேகத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற போதிலும் அவை பிரபல்யமடைந்து வருகின்றன.
இந்நிலையில் இவற்றின் விற்பனையை அதிகரிக்க கூகுள் நிறுவனம் ஒரு அதிரடி சலுகையினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி சில வகையான Chromebook கணனிகளை கொள்வனவு செய்பவர்களுக்கு அதன் ஒன்லைன் சேமிப்பகமான Google Drive இல் 1TB சேமிப்பு கொள்ளளவினை முற்றிலும் இலவசமாக வழங்கவிருக்கின்றது.
இந்த சலுகையானது 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதிக்கு முன்னர் கொள்வனவு செய்யப்படும் Chromebook கணனிகளுடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இரண்டு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படும் 1TB சேமிப்பு வசதி மூலம் 240 டொலர்கள் மீதப்படுத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top