↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ஒவ்வொரு ரசிகருக்கும், ஒவ்வொரு நடிகருக்கும் மிகவும் அபிமான இசையமைப்பாளர்கள் என யாரையாவது ஒருவரைத்தான் குறிப்பிடுவார்கள். 
சராசரி ரசிகரைப் போல சில நடிகர்களும் அவர்களது மனம் கவர்ந்த இசையைமப்பாளரைப் பற்றிக் குறிப்பிடுவது ஆச்சரியமான ஒன்றுதான். அப்படித்தான் இசையமைப்பாளர் இளையராஜாவைப் பற்றி நடிகர் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.

தனுஷ் நடிக்கும் ஷமிதாப் ஹிந்திப் படத்திற்கு தற்போது இளையராஜா இசையமைக்க ஆரம்பித்திருக்கிறார். பல பேட்டிகளில் தனுஷ் அவருடைய மனம் கவர்ந்த இசையமைப்பாளர் இளையராஜாதான் எனக் குறிப்பிட்டிருக்கிறார். தனுஷின் ஆரம்ப காலப் படங்களில் இளையராஜாவின் இளைய மகன் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவான பாடல்கள் தனுஷை ரசிகர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தது. தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா இசையமைத்த பல படங்களுக்கு இளையராஜாவின் பாடல்கள் படம் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த்து என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே சமயம், சமீப காலத்தில் தனுஷ், அவர் நடிக்கும் படங்கள், தயாரிக்கும் படங்கள் ஆகியவற்றில் அனிருத்தை மட்டும்தான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்து வருகிறார். யுவன்ஷங்கர் ராஜாவை சுத்தமாகவே மறந்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இதனிடயே தனுஷ் அவருடைய டிவிட்டர் வலைத்தளத்தில் “என்னுடைய கடவுள், என்னுடைய தலைவன், என்னுடைய இசைஞானி, என்னுடைய இசை, என்னுடைய இன்ஸ்பிரேஷன், என்னுடைய ஆன்மா, என்னுடைய இதயத் துடிப்பு, என்னுடைய இளையராஜா” என புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
இதுவரை இளையராஜாவை இந்த அளவிற்கு வேறு யாராவது புகழ்ந்து தள்ளியிருக்கிறார்களா என தனுஷ் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.


.........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

.......................................................................................................

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top