↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad உலக அளவில் உள்ள தமிழ் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இரண்டு படங்கள் என்று சொன்னால் அவை ‘லிங்கா’ மற்றும் ‘ஐ’ தான். எந்திரன் படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் அவருடைய ஸ்டைலில் முழுமையாக நடித்துள்ள லிங்கா படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருக்கிறார். நண்பன் படத்தை இயக்கிய ஷங்கர், விக்ரம் நாயகனாக நடிக்க அவருடைய ஸ்டைலில் ‘ஐ’ படத்தை இயக்கியிருக்கிறார். இரண்டு படத்திற்கும் பொதுவான ஒரு விஷயமாக இருப்பது ஏ.ஆர்.ரகுமானின் இசை.
ஐ படத்தின் பாடல்கள் செப்டம்பர் மாதமும், லிங்கா படத்தின் பாடல்கள் கடந்த வாரமும் வெளியிடப்பட்டன. இரண்டு படங்களும் இன்னும் ஒலி வடிவத்தால் ரசிகர்களை மிக அதிகமாக ஈர்க்கவில்லை. பொதுவாக, ரகுமான் இசையமைக்கும் படங்கள் என்றாலே அவை படம் வெளிவந்த பிறகு விஷுவலுடன் பார்த்த பிறகுதான் அதிகமான வரவேற்பைப் பெறும். ரகுமான் இசை போகப் போகத்தான் பிடிக்கும் என்று அவருடைய ரசிகர்கள் சொல்வார்கள்.
இரண்டு படங்களின் பாடல்களைப் படமாக்கியிருக்கும் விதத்தில் பிரம்மாண்டமும், இயக்குனர்களின் ஈடுபாடும் அதிகமாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. படம் வெளிவந்த பின் அந்தப் பாடல்களின் ஹிட் விகிதம் வேறு மாதிரி இருக்கும். இரண்டு படங்களுக்கும் ஏ.ஆர். ரகுமான் இசை என்பதாலும், ரஜினிகாந்த், ஷங்கர் இருவரும் உலகம் முழுவதும் அறியப்பட்டவர்கள் என்பதாலும், லிங்கா, ஐ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் போது உலக அளவில் இரண்டு தமிழ்ப் படங்கள் மிகப் பெரும் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

.......................................................................................................

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top