↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


அபிமன்யூ சிங், விஜய் நடித்த வேலாயுதம், தலைவா ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர். 'ஐ' படத்தை அடுத்து சீயான் விக்ரம் நடித்து வரும் '10 எண்றதுக்குள்ள' படத்தில் வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் அபிமன்யூ சிங் ஒப்பந்தமாகியுள்ளார்.
'ஐ' படத்தின் டீசரை பார்த்து, தான் விக்ரம் ரசிகனாகவே மாறிவிட்டதாகவும், அவருடன் நடிப்பதற்கு இவ்வளவு விரைவில் வாய்ப்பு வரும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் அபிமன்யூசிங் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

விக்ரம், சமந்தா, பசுபதி, ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை கோலிசோடா இயக்குனர் விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்து இயக்கி வருகிறார். முழுக்க முழுக்க சாலையில் நடைபெறும் கதையுள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிரார். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்து வரும் இந்த படம் வரும் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

.......................................................................................................


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top