↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய் சேதுபதி நடித்து, தயாரித்து வரும் படம் ‘ஆரஞ்சு மிட்டாய்’. 
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி 55 வயது முதியவராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அர்ஷிதா நடிக்கிறார். படத்தை இயக்குபவர் பிரபல இயக்குனர் பிஜூ விஸ்வநாத். இவர், ஆங்கிலம், இந்தி, மலையாளம், ஸ்பானிஷ், ஜப்பான் உள்ளிட்ட பல மொழிகளில் வெற்றிப் படங்களை இயக்கியிருக்கிறார்.
இருந்தாலும், தமிழில் இவர் இயக்கும் முதல் படம் இது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இப்படத்தின் டிரைலரை வருகிற 27-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். விஜய் சேதுபதி தனது தயாரிப்பில் ‘சங்கு தேவன்’ என்ற படத்தை தான் எடுப்பதாக இருந்தார்.
ஆனால், ஒரு சில காரணங்களால் அந்த படத்தை தயாரிப்பதிலிருந்து விலகிவிட்டார். இந்நிலையில் தற்போது ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்ற படத்தை தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

..................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

...........................................................................................................



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top