↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad அண்மையில் சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்திய மொபைல் போன்களில், மத்திய நிலையில், ரூ.5,000க்கும் குறைவான விலையில் 
போன்களைத் தேடுவோர் தேர்ந்தெடுக்கும் போனாக, ஜி 130 இ காலக்ஸி ஸ்டார் 2ஜி உள்ளது. இதன் அதிகபட்ச விலை ரூ.4,829.

இது ஒரு 2ஜி நெட்வொர்க்கில் இயங்கும் மொபைல் போன். இரண்டு சிம்களை இதில் இயக்கலாம். இதன் பரிமாணம் 109.8 x 59.9 x 11.8 மிமீ. எடை 107.6 கிராம். பார் டைப் வடிவத்தில் இது அமைக்கப்பட்டு, சாப்ட் கீகள் கொண்ட கீ போர்ட் தரப்பட்டுள்ளது. 

வெள்ளை நிறத்தில் உள்ள இந்த போன், டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் கொண்டது. இதன் திரை 3.5 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பிக்ஸல்கள் 320 x 480 என்ற அளவில் அமைந்துள்ளன. மல்ட்டி டச் வசதியும் இந்த திரையில் கிடைக்கிறது. 

லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஜாக், மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் (32 ஜி.பி. வரை) தரப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 512 எம்.பி. திறன் கொண்டது. இதன் ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. எட்ஜ், வை பி, புளுடூத், யு.எஸ்.பி. போர்ட் ஆகியவை இயங்குகின்றன. இதன் கேமரா 2 எம்.பி. திறன் கொண்டது. வீடியோ 480p@24fps வேகத்தில் இயங்குகிறது. 

இதில் தரப்பட்டுள்ள ப்ராசசர் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. அக்ஸிலரோமீட்டர் சென்சார் தரப்பட்டுள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4.2. கிட்கேட் ஆகும். எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகியவை இயங்குகின்றன.எம்பி 3 மற்றும் எம்பி 4 பிளேயர்கள் இதில் இயங்குகின்றன.

ஆர்கனைசர், போட்டோ /விடியோ எடிட்டர், கூகுள் சர்ச், கூகுள் மேப்ஸ், ஜிமெயில், யு ட்யூப், காலண்டர், ஜி டாக், பிகாஸா, வாய்ஸ் மெமோ, பிரிடெக்டிவ் டெக்ஸ்ட் ஆகிய வசதிகள் இணைந்தே தரப்படுகின்றன. இதில் லித்தியம் அயன் பேட்டரி 1,300 mAh திறனுடன் தரப்பட்டுள்ளது.


.........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

...........................................................................................................




0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top