↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
இலங்கையில் 5 தமிழக மீனவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். 2011ஆம் ஆண்டு மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை கைது செய்த இலங்கை கடற்படை அவர்கள் போதைப் பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டி சிறையில் அடைத்தது.
இந்த வழக்கில் 5 தமிழக மீனவர்களுக்கும் கொழும்பு உயர்நீதிமன்றம் இன்று தூக்கு தண்டனை விதித்தது. இது தமிழகத்தில் பெரும் பதற்றத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் பகுதியில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்திருப்பது அநீதியானது; கண்டிக்கத்தக்கது.
தமிழக மீனவர்கள் போதைப் பொருள் கடத்தினார்கள் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும். 5 மீனவர்களையும் மீட்பதற்கு தேவையான உயர் சட்ட உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Home
»
fisherman
»
news
»
news.india
»
news.srilanka
»
ops
» 5 தமிழருக்கு தூக்கு: மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஓ.பி.எஸ். கடிதம்
Recent Posts
முதல்வர் ஓ.பி.எஸ். ராஜினாமா எப்போது?
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட நிலையிலும் இன்னமும் முதல்வர் ஓ.பன[...]
மாப்பிள்ளையை ஏமாற்றிவிட்டு மணமகளுடன் முதலிரவு: மச்சானிற்கு சிறை!
திருமண நாளன்று மணமகனை தனிமைப்படுத்திவிட்டு மணமகளை மாமியார் வீட்டுக்கு கடத்திச் சென்று, மணமகளுடன் மு[...]
கருணாநிதி இல்லத் திருமண விழாவில் கொள்ளையடித்த பலே திருடர்கள்
கடந்த திங்கள்கிழமை (08.06.2015) அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத[...]
என் கடைசி மூச்சு வரை காதலனுடன் சேர்ந்து வாழ போராடுவேன்: தற்கொலைக்கு முயன்ற காதலி
சேலம் மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர், கடைசி மூச்சு இருக்கும் வரை காதலனுடன் சேர்ந்து வா[...]
பிரதமர் மோடி என்னை விட திறமையான விற்பனையாளர்: மன்மோகன்சிங் அதிரடி
பிரதமர் மோடி தன்னை விட திறமையான விற்பனையாளர் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவித்து[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.