↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவுக்கும், ஜபருன்னிஸார் என்ற முஸ்லிம் பெண்ணுக்கும் ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இளையராஜா, கங்கை அமரன் உள்ளிட்டோரின் எதிர்ப்பையும் மீறி நடக்கும் இந்த திருமணம், யுவன்சங்கர் ராஜாவுக்கு மூன்றாவது காதல் திருமணம் ஆகும்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் இரண்டாவது மகன் யுவன்சங்கர் ராஜா. இவர், ‘அரவிந்தன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார். சமீபத்தில் தனது 100வது படமான ‘பிரியாணி’ படத்திற்கு இசையமைத்தார்.
யுவன்சங்கர் ராஜாவுக்கு ஏற்கெனவே லண்டனைச் சேர்ந்த சுஜாயா என்ற பெண்ணுடன் 2005ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டாலும், அந்த காதல், திருமணத்திற்கு பிறகு நீடிக்கவில்லை. கருத்து வேறுபாட்டால், 2007ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர். 2008ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்துவிட்டனர்.
அதன்பிறகு, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளான ஷில்பா என்பவருக்கும், யுவன்சங்கர் ராஜாவுக்கும் காதல் மலர்ந்தது. 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்துகொண்டார்கள். சில மாதங்களிலேயே இவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள்.
மனைவி பிரிந்துபோன துயரத்தில் இருந்த யுவனுக்கு அடுத்த அடி, அவரது அம்மாவின் மறைவு. இதனால் வெறுப்படைந்த யுவன்சங்கர் ராஜா மனஅழுத்தத்தினால் வாழ்க்கையை வெறுத்திருந்த நேரத்தில், திடீரென இஸ்லாம் மதத்துக்கு மாறினார். தான் இஸ்லாம் மதத்தை பின்பற்றுவதாக அவரே தெரிவித்தார். ஒரு “நண்பர்” மூலம், அவரது செல்வாக்குக்கு உட்பட்டு இஸ்லாம் மதத்துக்கு மாறியதாக சொன்ன யுவன், அந்த “நண்பர்” யார் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில், 34வயது யுவன்சங்கர் ராஜா, ஜபருன்னிஸார் என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜபருன்னிஸார் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையை சேர்ந்தவர். துபாயில் ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார்.
யுவன்சங்கர் ராஜா–ஜபருன்னிஸார் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் ரகசியமாக நடந்துள்ளது. ஜபருன்னிஸாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டார்கள். யுவனின் தந்தை இளையராஜா, சித்தப்பா கங்கை அமரன் உட்பட யுவன் குடும்பத்துப் பெரியவர்கள் யாரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
யுவனுக்கு இதுவும் காதல் திருமணம் தானாம். யுவன்-ஜபருன்னிஸார் காதல் மலர்ந்தது எப்படி என்பது குறித்து யுவனுக்கு நெருக்கமானவர்கள் கூறுவதாவது:
“தன் திருமணத்தை தான் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்ற எண்ணம் கொண்டவர் யுவன். தன் விருப்பத்தை தன் குடும்பத்தினர் நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று மட்டுமே எதிர்பார்ப்பார். இந்த அடிப்படையில்தான் அவரது முதல் காதல் திருமணமும், அது முறிந்தபிறகு இரண்டாவது காதல் திருமணமும் நடந்து முடிந்தன.
“யுவன் பல்வேறு காரணங்களுக்காக அடிக்கடி துபாய் சென்று வருவது உண்டு. அவரது இரண்டாவது திருமணம் முறிந்த பின்னர், இதுபோல் துபாய்க்கு ஒருமுறை சென்றிருந்தபோது, யுவனின் தீவிர ரசிகையான ஜபருன்னிஸார், இருவருக்கும் பொதுவான ஒரு நண்பர் மூலம் யுவனை சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பின்போது, முதல் பார்வையிலேயே யுவனுக்கு ஜபருன்னிஸாரை பிடித்துப் போனது. அதன்பிறகு, தொலைபேசி தொடர்புகள், சமூகவலைத்தள தொடர்புகள், சில பல சந்திப்புகளுக்குப் பிறகு, யுவன் தன் காதலைச் சொல்ல, அதை ஜபருன்னிஸார் ஏற்றுக்கொண்டார். இஸ்லாம் மதம் மீது தீவிர பற்று கொண்ட ஜபருன்னிஸாரின் செல்வாக்குக்கு உட்பட்டு, அவரை கரம் பிடிப்பதற்காக யுவனும் இஸ்லாம் மதத்தை தழுவினார்.
“யுவன் முஸ்லிம் பெண்ணைக் காதலிப்பதும், காதலிக்காக மதம் மாறியதும் தந்தை இளையராஜாவுக்கோ, சித்தப்பா கங்கை அம்ரனுக்கோ சுத்தமாகப் பிடிக்கவில்லை. இதனால் இளையராஜா குடும்பத்தில் பயங்கர புயல் வீசிக் கொண்டிருக்கிறது. யுவனுக்கும், இளையராஜாவுக்கும் இப்போது பேச்சுவார்த்தைகூட கிடையாது. கங்கை அமரன் வந்து யுவனுக்கு புத்திமதி சொல்ல முயன்றார். ஆனால் யுவன் அவரை எடுத்தெறிந்து பேசிவிடவே, ‘வயிறு எரிஞ்சு சொல்றேன். நீ வெளங்க மாட்டே’ என்று சபித்துவிட்டு சென்றுவிட்டார் கங்கை அமரன்” என்கிறார்கள், யுவனுக்கு நெருக்கமானவர்கள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top