↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கத்தி படத்தின் கார்ப்ரேட் கம்பெனிகள் தமிழ் நாட்டில் எத்தனை கிராமங்களை துண்டு துண்டாக வெட்டிக் கொண்டிருக்கிறது இதனால் விவசாயிகளின் நிலை எந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது என்பதை புட்டு புட்டு வைத்தார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த கதையில் தைரியமாக நடித்த விஜய்யை பாராட்டியாக வேண்டும்.
இதனை தொடர்ந்து தற்போது அஜித்தும் கார்ப்ரேட் கம்பெனிகளின் மீது அடுத்த தாக்குதல் நடத்தவிருக்கிறார். ஆம், என்னை அறிந்தால் என்ற தலைப்பு வைக்கப்பட்டதிலிருந்தே இப்படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று அஜித் ரசிகர்கள் மூளையை போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது இப்படத்தின் கதை இது என்று ஒரு வதந்தி உலாவிக் கொண்டிருக்கிறது. 
அதாவது அஜித் இலங்கை சிறையில் குற்றவாளியாக இருப்பவராம், இவரின் வளர்ப்பு அப்பா உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர். கார்ப்ரேட் கம்பெனிகளால் அஜித்தின் வளர்ப்பு அப்பாவுக்கு ஆபத்து ஏற்படுகிறது இதனால் அவர் கொல்லப்படுகிறார். அவருக்கு அடுத்து இந்த சொத்தை ஆளப்போவது யார் என்ற கேள்வி வரும்போது அஜித் என்ற வளர்ப்பு மகன் இருப்பதாக தகவல் தெரிகிறது. அதுவும் இலங்கை சிறையில் இருப்பதாக தகவல் வர அவரை எப்படியாவது வெளியே கொண்டுவந்துவிடுகிறார்கள். வந்தவர் தன் அப்பா இயற்கையாக சாகவில்லை, கொல்லப்பட்டிருக்கிறார் என்ற உண்மை தெரியவருகிறது அதன்பின் படத்தில் நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் க்ளைமேக்ஸ்…
இது ஒரிஜினல் கதையா என்று தெரியவில்லை. அப்படியே ஒரிஜினல் கதையாக இருந்தாலும் படம் மாஸ் ஹிட் அடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விஜய்க்கு அடுத்து மீண்டும் கார்ப்ரேட் கம்பெனியை குறி வைத்து அடுத்த படம் வருகிறது.. பார்க்கலாம் இது எந்தளவுக்கு உண்மை இருக்குன்னு.!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top