↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
அஜீத் நடித்த தீனா படத்தின் மூலம் இயக்குநரானவர் ஏ.ஆர்.முருகதாஸ். இன்றைக்கு தமிழ் சினிமா மட்டுமல்லாது, இந்தி சினிமாவிலும் முன்னணி இயக்குநராக இருக்கிறார். சமீபத்தில் விஜய் நடிப்பில் அவர் இயக்கியுள்ள கத்தி படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் முருகதாஸ், தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரிடம் பல்வேறு விஷயங்கள் கேட்கப்பட்டன, அதில் ஒவ்வொன்றுக்கும் பொறுமையாக பதில் சொன்னார்.
நடிகர் அஜீத்தை பற்றி முருகதாஸ், தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், நான் உதவி இயக்குநராக இருந்த காலத்தில், ஒருநாள் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி வந்து என்னிடம் அஜீத்தை பார்த்து இருக்கிறீர்களா என்று கேட்டார், நான் இல்லை என்று கூறினேன், உடனே அவர் இங்கு தான் இருக்கிறார் என்று சொல்லி என்னை அவரிடம் அழைத்து சென்றார், நான் அவரை பார்த்ததும் ஹலோ சார் என்றேன், அவர் என்னை பார்த்த இரண்டு விநாடிகளில் நீங்கள் பெரிய ஆளாய் வருவீர்கள் என்றார். அவர் சொன்னது என்னை மிகுந்த மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. பிறகு நான் எனது பணிகளை செய்ய தொடங்கினேன். பிறகு அவர் மூலமாகத்தான் எனது முதல்படமாக தீனா படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது, அந்த வகையில் எனக்கு வாழ்வு அளித்தவர் நடிகர் அஜீத் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment