↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஆர்யாவை வைத்து அறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம், ஆரம்பம் ஆகிய நான்கு படங்களை இயக்கியவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். தற்போது யட்சன் என்ற படத்தின் மூலம் இயக்குநர் விஷ்ணுவர்தன் ஆர்யா உடன் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறார். 
யுடிவி தயாரிக்கும் யட்சன் படத்தில் இன்னொரு நாயகனாக விஷ்ணுவர்தனின் தம்பி கிருஷ்ணாவும் நடிக்கிறார். 

பல படங்களில் நடித்தும் க்ளிக்காகாமல் இருக்கும் தன் தம்பிக்கு மார்க்கெட் வேல்யூ ஏற்படுத்திக் கொடுப்பதற்காக ஆர்யா உடன் நடிக்க வைத்திருக்கிறார் விஷ்ணுவர்தன். 
அண்ணன் விஷ்ணுவர்தன் படத்தில் தம்பி கிருஷ்ணா ஹீரோவாக நடிப்பது இதுவே முதல்முறை. 
பிரபல வாரஇதழில் இரட்டை எழுத்தாளர்களான சுபா எழுதிய த்ரில்லர் தொடர்கதையைத்தான் யட்சன் என்ற பெயரில் படமாக எடுக்கிறாராம் விஷ்ணுவர்தன். இதை அவர் மறுக்கவில்லை. 
யட்சன் படத்தில் ஆர்யா அஜித் ரசிகராக நடிப்பதாகவும், இதனால் படத்தின் ஒரு காட்சியில் அஜித் கெஸ்ட்ரோலில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 
இந்த தகவல் உண்மையா? 

விஷ்ணுவர்தன் தரப்பில் இதுகுறித்து விசாரித்தால், 
யட்சன் படத்தில் அஜித் சார் நடிக்கிறார் என்பதெல்லாம் வதந்திதான். அப்படி ஒரு முயற்சியையே நாங்கள் செய்யவில்லை. ஆரம்பம் படத்தில் அஜித் சார் உடன் இணைந்திருப்பதால், அஜித் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என யூகமாக செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் கதைப்படி அஜித் பட பூஜை ஒன்றிற்கு ஆர்யா வருவதுபோலவும், அங்கே இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இருப்பதுபோலவும்தான் காட்சி வருகிறது. இந்த காட்சி குறித்த செய்திதான் அனேகமாக அஜித் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என வதந்தியாக மாறி வெளியாகி வருகிறது என்று கூறுகிறார்கள். 

அதே சமயம், அஜித் கெஸ்ட்ரோலில் நடிப்பது உண்மைதான். அதை ரகசியமாக வைத்திருக்கிறார்கள் என்று யட்சன் படக்குழுவை சேர்ந்தவர்களும் காதைக்கடிக்கிறார்கள். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top