↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பிரஸ்மீட் வைத்தால் கதையை திருடியது பற்றியே அதிகம் கேள்வி கேட்பார்கள் என்பதால் மீடியாக்களை சந்திப்பதை தவிர்த்துவிட்ட இயக்குநர் முருகதாஸ் indiaglitz.com இணைய இதழுக்கு மட்டும் தனி பேட்டி கொடுத்திருக்கிறார். 
இதில் “எனக்கு பின்னாடியும் சாதி இருக்குல்ல.. எனக்காக வருவாங்கள்ல எல்லாரும்..” என்று தன்னை எதிர்ப்பவர்களுக்கு ஒரு எச்சரி்ககையையும் காட்டியிருக்கிறார்..!
முருகதாஸின் முழு பேச்சு விபரம் :
“நாங்க வந்து ஐங்கரன் கருணா சாரோட நிறுவனத்துக்காகத்தான் முதல்ல கமிட்டானோம். கருணா சார்தான் ‘லைகா’ன்னு இன்னொரு கம்பெனியோட போனாரு.  அதுக்கப்புறம் ‘இது யாரு சார்.. என்ன ஏதுன்னு ஒண்ணுமே தெரியலையே?’ன்னு கேட்டோம். ‘இல்ல ஸார்.. அவரும் ஐரோப்பிய நாட்ல வாழ்ற ஒரு தமிழர்தான். பெரிய பிசினஸ்மேன். நெறைய தமிழ்ப் படம் பண்ணனும்கிற ஆசையில் வந்திருக்காங்க. அவ்ளோதான்’னு சொன்னார். பெரிய கம்பெனிங்கிறாங்க.. நம்ம படத்தோட டையப் பண்றாங்கன்னு வரும்போது அது புரொடியூசரோட ரைட்ஸ்னுன்னு சொல்லி விட்டுட்டோம்.
திரும்பி காண்ட்ரவர்ஸி செய்திகள் கெளம்பும்போது, ‘இப்படியொரு குற்றச்சாட்டு இருக்கே ஸாரு’ன்னு கேக்கும்போது, அவங்க எங்களுக்கு விளக்கம் சொல்லிட்டாங்க. விளக்கம் சொன்ன பின்னாடி தெளிவாயிட்டோம் நாங்க ரெண்டு பேரும். அதுக்கப்புறம் அன்றிலிருந்து இன்னிக்குவரைக்கும் நாங்க ரெண்டு பேரும் அதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணினதே கெடையாது. 
ஊர்ல பேசிக்குவாங்க.. ‘அவரு அப்படி.. இவர் அப்படி.. ராஜபக்‌ஷேவோட கூட்டாளி’ன்னு பேசிக்குவாங்க… பட், அதைப் பத்தி நாங்க கவலைப்படவே இல்லை. எங்க வேலையை நாங்க பார்த்தோம். அவ்ளோதான்.. இதைப் பத்தி நாங்க எதுக்கு அவங்களுக்கு விளக்கம் கொடுக்கணும்..? நாங்க எதுக்கு மண்டையை உடைச்சிக்கணும்..?
ஏற்கெனவே படத்துக்கு எவ்வளவு உழைக்க வேண்டியிருக்கு.. எவ்வளவு யோசிக்க வேண்டியிருக்கு..? ஏன்னா காண்ட்ரவர்ஸி அவ்வளவு எங்ககிட்ட இருக்கு.. என்னால 100 கேள்விகள் அவங்களை திருப்பிக் கேட்க முடியும், அதுக்கு ஒரு கேள்விக்குக்கூட அவங்களால ஆன்ஸர் சொல்ல முடியாது. அது எனக்குத்தான் தெரியும். ஏன்னா உண்மை என்னன்னு எங்களுக்குத் தெரியும்.
ஏற்கெனவே நான் விளக்கம் கொடுத்திட்டேன். இதுக்கு மேல விளக்கம் வேணும்னா, அதை அவங்ககிட்டதான் போய்க் கேக்கணும்..! இது நல்லாயில்லை. அதை நாங்க மைண்ட்ல ஏத்துக்கவேயில்லை.. எங்க வேலையை நாங்க பார்த்துக்கிட்டிருக்கோம்.
என்னோட சினிமாங்குறது ஆர்ட். அந்த ஆர்ட்ல கொஞ்சம் கவனம் பிசகினாலும் அது டைவர்ட்டாயிரும். அது வந்து கயித்துல நடக்குற மாதிரி.. கீழே இருந்து ஒருத்தன் கத்தினா.. அதை நான் கேட்டு என் கவனம் திசை திரும்பினால் குறி தவறிரும்.. அதுனால எனக்கு அதைப் பத்தி கவலையே இல்லை.. என் தொழிலை நான் பார்க்குறேன். உன் தொழிலை நீ பாருன்னு சொல்லிட்டு என் வேலைய பார்த்தேன்..! 
எது எப்படியிருந்தாலும் யாராலும் இதைத் தடுக்க முடியாதுங்கிறது மட்டும் எங்களுக்கு தெளிவா தெரியும். அதனால இந்த எதிர்ப்பையெல்லாம் நாங்க மைண்ட்டுல ஏத்திக்கவே இல்லை.  படமெல்லாம் முடிஞ்ச பின்னாடி ரிலீசுக்கு முன்னாடி ஒரு பிரஸ்ஸர் இருந்துச்சு. பட், ஓகே அது பின்னாடி சால்வ் ஆயிடுச்சு. அதுனால அது ஒண்ணுமில்லாம போயிருச்சு..!
படத்துக்கு கமெண்ட்ஸ் வரும்… சில பேர் எதிர்ப்பு தெரிவிப்பாங்க.. சிலர் மிரட்டல் விடுப்பாங்க. இதையெல்லாம் எதிர்பார்த்ததுதான்.. ஆனா ஒரு பீர் பேக்டரியோட ஓனர் 5,000 கோடி ரூபாய் கடன் வாங்கினார்ங்கிறது எல்லாருக்கும் தெரிஞ்ச நியூஸ். அதை வந்து யாரும் மறைக்க முடியாது, மறுக்கவும் முடியாது. அது நடந்த ஒரு விஷயம். நடந்த ஒரு விஷயத்தை நம்ம படத்துல போடும்போது எனக்கு என்ன வரவேற்பு கிடைச்சதுன்னு பார்க்கிறதுக்கு என்னோட போனை வாங்கி நீக்க பார்க்கணும்கிற அவசியமே கெடையாது, தியேட்டர்ல மக்கள் அந்த சீன்களுக்கெல்லாம் கிளாப்ஸ் பண்றாங்களா.. அமைதியா இருக்காங்களான்றதை படம் பார்க்கும்போது நீங்க அவங்களை கவனிச்சாலே உங்களுக்கே தெரியும்.. 
இந்த மாதிரி எதிர்ப்புகள் கெளம்புறதைப் பார்க்கும்போது ஏன் தமிழ்ப் படம் பண்ணனுமா.. சினிமாவுலே இருக்கணுமானெல்லாம் தோணுது. ஏன்னா இது பண்ணக் கூடாது.. அது பண்ணக் கூடாதுன்னு பிரச்சினைகள்.
இன்னைக்கு ராமாயாணத்தைக்கூட எடுக்கணும்னா அது இலங்கை பிரச்சினை. அதை போட்டுக் காட்டணும்னு 10 பேர் வருவாங்க. சீதையைக் கடத்திட்டுப் போனாங்க.. அதை எனக்குப் போட்டுக் காட்டணும்னு 10 பேர் நிக்குறாங்க. நீங்க குரங்கை அவமானப்படுத்திட்டீங்கன்னு புளூகிராஸ்ல இருந்து 10 பேர் வந்து நிப்பாங்க. நீங்க இராவணனை வந்து எடுத்தீட்டீங்கன்னு இன்னொரு 10 பேர் வருவாங்க..
இராமாயணத்தைக்கூட இங்க எடுக்க முடியாதுன்ற சூழ்நிலை வரும்போது ஒரு கிரியேட்டரா உண்மையிலேயே ரொம்ப டயர்ட்டா இருக்குது. இதுக்கு பேசாம வேற எங்கையாவது ஏதாவது ஒரு லேங்குவேஜ்ல படம் பண்ணலாம்னுகூட உண்மையிலேயே தோணுது. இதெல்லாம் கடுமையான கண்டனத்துக்கு உரியது.
நாட்டுல எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு.. தினம் எவ்வளவோ பேர் செத்துக்கிட்டிருங்காங்க.. நாட்ல திருட்டுகள், கற்பழிப்புகள்னு எவ்வளவோ நடந்துக்கிட்டிருக்கு. 4 வயசுக் குழந்தையை ரேப் பண்றாங்க. அதையெல்லாம் யாராச்சும் ஒருத்தன் கேட்டிருப்பானா..? பேப்பரை மடிச்சிட்டு மசால் தோசை சாப்பிட்டுக்கிட்டிருப்பாங்க..  அதைப் பத்தி ஒருத்தன் கேள்வி கேட்கல. 
இது ஒரு சினிமா.  சினிமாங்கிறது 15 நாள் படம், அதுக்கப்புறம் அவங்கவங்க வேலையைப் பார்த்துட்டுப் போகப் போறாங்க. இதை ஒரு பெரிய இஸ்யூவா எடுத்துக்கிட்டு பண்றாங்க.
இன்னிக்கு ச்சும்மா ஒரு வில்லேஜ் படம்.. முறைப் பையன்.. முறை மாமன். அவன் இவனோட சண்டை போட்டான். அவன் இவனோட சண்டை போட்டான். ஒயின்ஷாப்புக்கு போனாங்க.. தண்ணியடிச்சாங்க.. அப்பன் பிள்ளைய தருதலைன்னு திட்டுனான். பையன், ஸ்கூல் யூனிபார்ம் போட்ட ஒரு பிள்ளை பின்னாடியே போறான். அந்தப் பிள்ளை ஒரு குடிகாரனை லவ் பண்ணுது.. இப்படி சாதாரணமா கதையை எழுதினா அதெல்லாம் ஓகே.. இதையெல்லாம் விட்டுர்றாங்க.. அதெல்லாம் இவங்களுக்கு ஒரு பிரச்சனையா கிடையவே கிடையாது..
ஆனா, நாம ஒரு நல்ல படம் எடுக்கணும்னு நெனைக்கும்போது 100 பேர் கெளம்பி வர்றாங்க. இவங்களையெல்லாம் யார் நியமிச்சாங்க? திடீர்னு ஒரு குரூப் வருது.. ‘எங்களுக்கு படத்தைப் போட்டுக் காட்டு’ங்கிறாங்க.,.. இவங்கெல்லாம் யாரு..? இவங்க என்ன, கவர்மெண்ட்ல ஒர்க் பண்ணினாங்களா..? கவர்மெண்ட் சென்ஸார் சர்ட்டிஃபிகேட் கொடுத்த ஒரு படத்தை நீதிமன்றமே ‘இந்தப் படத்தை ரிலீஸ் செய்யலாம்’னு சொன்னதுக்கப்புறம் ஒரு தனி நபர் வந்து ‘எங்களுக்கு படத்தைப் போட்டுக் காட்டுங்க’ன்னு கேட்கிறதுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு..? யார் இவங்களுக்கு ரைட்ஸ் கொடுத்தா..?
அந்தப் படம் தியேட்டருக்கு வரட்டும், வந்த பிறகு நீங்க பாருங்க. அதுல என்ன கருத்து சொல்லிருக்காங்கன்னு வந்து கேளுங்க.. படம் வரவே இல்ல… அதுக்கு முன்னாடியே வந்து, ‘படத்தை காட்டுங்க’ன்னா.. உனக்கு எதுக்கு நான் படத்தை காட்டணும்…? உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு என்னை கேள்வி கேட்கிறதுக்கு..?  
நான் கேட்கலாமா..? உன்னோட அக்கவுண்ட்ஸ் என்னன்னு நான் கேட்கலாமா..? இல்லீல்ல… அதை கேட்கிறதுக்கு ஆடிட்டர்னு ஒருத்தர் இருக்காருல்ல.. இன்கம்டாக்ஸ்ன்னு ஒரு அமைப்பு இருக்குல்ல.
அதனால அவங்கவங்க வேலையை அவங்கவங்க பாருங்க.. என் வீட்டை எட்டிப் பார்க்காதீங்க.. பதிலுக்கு நானும் வருவோம்ல. நாங்க வரல.. எங்க வேலையை நாங்க பார்க்கிறோம்.. உங்க வேலையை நீங்க பாருங்க. அவ்ளோதான் விஷயம்.
இது என்னாகுதுன்னா.. சினிமாவை ஆர்ட்டா பண்ணும்போது.. ஒரு நல்ல படம் எடுக்கும்போது டயர்டாகுது.. எதுக்கு இந்த மாதிரி படத்தை எடுத்துக்கிட்டு..? நாமளும் அது மாதிரியே எடுத்திட்டுப் போயிரலாமேன்னு தோணுது.
இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர நாங்க ஒரு பெரிய அமைப்பை உருவாக்கலாம்னு நெனைச்சிக்கிட்டிருக்கோம். நான் மட்டும் பண்ணினா அது எனக்காக பண்ணின மாதிரி ஆயிரும். என்னை மாதிரி பாதிக்கப்படுற எல்லா டைரக்டர்ஸூம், யூனியன்ல்லாம் சேர்ந்து இதுக்கு ஒரு முடிவு கட்டணும்..
திடீர்ன்னு வந்து போறவன், வர்றவனெல்லாம் எங்க முதுகை சொறிஞ்சு பார்க்க முதுகைக் காட்டக் கூடாதுங்கிறதுல ரொம்பத் தெளிவா இருக்கோம். கூடிய சீக்கிரம் இதுக்கு எல்லாத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைப்போம்.
போறவன் வர்றவனெல்லாம் எங்களை கொஸ்டீன் கேட்டு.. அங்கேயும் பாலிடிக்ஸ்.. ஒரு சாதி.. ஒரு மதம்.. இதெல்லாம்.. இது எல்லாருக்கும் தெரியும். எங்களுக்கும் பண்ணத் தெரியும். நாங்க மட்டும் என்ன நிலாவுல இருந்தா குதிச்சி வந்தோம்..? எனக்குப் பின்னாடியும் ஒரு சாதி இருக்குல்ல. எனக்கும் வருவாங்கள்ல எல்லாரும்.. அதெல்லாம் வேணாம்..
டீசண்டா வாழணும். சினிமாவை ஒரு ஆர்ட்டா நினைக்கணும்.. மனப்பூர்வமா வேலை பார்க்கணும்னுதான் வந்திருக்கோம். எங்களை ப்ரீயா விட்ருங்க.. எங்களை ப்ரீயா விட்டாத்தான் நாங்க நல்ல படம் எடுக்க முடியும்.. 
இல்லேன்னா என்ன பண்ண முடியும்..? அதிகப்பட்சம் போராடிப் பார்ப்போம், முடியலையா? வேற ஸ்டேட்டுக்குப் போயிட்டு கண்ணு காணாத இடத்துல உட்கார்ந்துக்கிட்டு வேலை செய்வோம்..
அவங்கிட்ட திட்டு வாங்கினாக்கூட பரவாயில்ல… சொந்த வீட்ல, சொந்த ஊர்லயே இருந்துக்கிட்டு திட்டு வாங்கிக்கிட்டிருக்கிறது ரொம்பக் கேவலமா இருக்குது. ரொம்ப மன வேதனையோடதான் நான் பேசுறேன்..”
- இப்படி பொங்கித் தீர்த்திருக்கிறார் திருட்டுக் கதையில் படமெடுத்த திருட்டு இயக்குநர் திரு.ஏ.ஆர்.முருகதாஸ்..!
இந்தப் படத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய வேல்முருகனும், 100-க்கும் மேற்பட்ட இயக்கங்களும் எங்கே இதில் சாதியைக் கொண்டு வந்தன..?
‘லைகா மொபைல்’ என்ற நிறுவனம் ஈழத்து தமிழ் மக்களை கொன்றொழித்த ராஜபக்சேவின் குடும்பத்தினருடன் தொழில் கூட்டணி வைத்துள்ளது. ஆகவே அந்த கம்பெனி தயாரிப்பில் வெளியாகும் படத்தினை திரையிடக் கூடாது என்றுதான் சொன்னார்கள்.
இந்த ஜாதிக்கார முருகதாஸ் இயக்கிய படத்தை வெளியிடக் கூடாது என்றோ.. இந்த ஜாதிக்கார நடிகர் நடித்த படம் இது. ஆகவே இதனை எதிர்க்கிறோம் என்றோ அவர்கள் சொல்லவில்லை. எல்லாம் தெரிந்தும் வேண்டுமென்றே விஷயத்தை டைவர்ட் செய்கிறார் இயக்குநர் முருகதாஸ்.
லைகாவுக்கும், ராஜபக்சே குடும்பத்திற்கும் இருந்த தொழில் உறவுகளுக்கான ஆதாரங்களை முருகதாஸின் கையிலே கொடுத்த பிறகும் இவர்களால் என்ன செ்யதுவிட முடியும் என்கிற அகங்காரத்தில் ‘எங்களுக்கு ஆரம்பத்திலேயே திருப்தியாகிவிட்டது’ என்று ஒரு வரியைச் சொல்லி நழுவிச் செல்கிறார்..!
ஏதோ சாதிக்கார சங்கங்களை வைத்திருப்பவர்கள்தான் தொடர்ச்சியாக படங்களை தடுக்கிறார்கள் என்றும் இதற்காக எனக்கு பின்னாடியும் சாதி இருக்குல்ல என்று மிரட்டலும் விடுத்துள்ளார். இது நிச்சயமாக அடுத்தடுத்து முருகதாஸின் படங்கள் ரிலீஸாகும்போது எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை..!
“ஆமாம்.. லைகாதான் தயாரிக்குறாங்க. ராஜபக்சே கூட்டாளிதான் அவங்க. இது எங்களுக்கும் தெரியும். ஆனா எங்களுக்கு அதைப் பத்தி கவலையில்லை. எனக்கு 15 கோடி சம்பளம் கொடுத்திருக்காங்க. அதுதான் எனக்கு முக்கியம்.. உங்களால முடிஞ்சதா பார்த்து்டடு போங்கடா..”ன்னு 5 வரில சொல்லிட்டுப் போறதை விட்டுட்டு…
இவ்வளவு தூரம் இந்தப் பிரச்சனையை ஜவ்வா இழுத்து, மீடியாக்களையும் டென்ஷனாக்கி.. கவர்ன்மெண்ட்டையும் பதட்டப்படுத்தி.. சத்யம் தியேட்டர் கண்ணாடியை உடைக்க வைச்சு.. இதுல 7 அப்பாவி மாணவர்களை அரெஸ்ட் செய்ய வைச்சு..!!! எவ்ளோ பிரச்சினைகள்..!
எல்லாஞ்சரி.. இந்தப் படத்துக்கான கதையை ஒரு அப்பாவி எழுத்தாளர்கிட்டேயிருந்து கூச்ச நாசச்மே இல்லாமல் திருடனதை பத்தி ஒரு வார்த்தைகூட பேசாம எஸ்கேப்பாயிட்டீங்களே..? 
இது நியாயமா மிஸ்டர் முருகதாஸ்..?

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top