இளைய தளபதி விஜய் மீது அனைவருக்கும் ஒரு வித மரியாதை உள்ளது. அவர் தற்போதுபுலி படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் முதன் முறையாக நடித்து வருகிறார்.சில நாட்களுக்கு முன் விஜய் படத்திற்காக தான், கார்த்தி படத்தில் இருந்து ஸ்ருதிவிலகினார் என்று ஒரு செய்தி பரவியது.
இதுக்குறித்து புலி படக்குழுவினர்கள் கூறுகையில், ‘புலி திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புதலக்கோணம் சுற்றுலா தளத்தில் நடைபெற்று வருகிறது.
கலை இயக்குநர் முத்துராஜ்தலைமையில் 150 பேருக்கு மேலானோர் இரண்டு மாதம் பணிபுரிந்து காடும் - ஏரியும்சங்கமிக்கும் இடத்தில் இந்திய திரையுலகில் யாரும் பார்த்திராத வகையில் கிராமம்ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.
ஏப்ரல் மாதத்தில் இந்தப் படப்பிடிப்பில் ஸ்ருதி கலந்து கொள்ளவில்லை என்றால், மேமாதம் சுற்றுலா பயணிகள் வந்துவிடுவதால் மொத்த செட்டையும் பிரிக்க வேண்டியசூழ்நிலை உருவாகும். இதனால் எங்களுக்கு பெரும் இழப்பும் நஷ்டமும் ஏற்படும். இதைநாங்கள் ஸ்ருதி ஹாசனிடம் தெரிவித்தோம்.
அதைப் புரிந்துகொண்டு இறுதிக்கட்டத்தில் ஒரு படம் நின்றுவிடக் கூடாது என்ற நல்லஎண்ணத்தில் 'புலி' படப்பிடிப்பில் ஸ்ருதி ஹாசன் கலந்துகொண்டார். ஸ்ருதி கண்டிப்பாகவேறு புதிய படத்தில் நடிக்க செல்லவில்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறோம்.
மேலும், தயாரிப்பாளர்களாகிய எங்களது கஷ்டங்களை மனதில் கொண்டு பல தேதிகளைஎங்களுக்காக விட்டு வந்த ஸ்ருதி ஹாசனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றுஅறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment