அஜித் பிறந்தநாளில் ஏகப்பட்ட படங்கள் ரிலீஸாகும் போல் தெரிகிறது. சூர்யாவின் மாஸ், ஆர்யா-விஜய்சேதுபதியின் புறம்போக்கு போன்ற படங்கள் ரிலீஸாக உள்ள நிலையில், இப்போது வமலின் காவல் படமும் ரிலீஸாக இருக்கிறது. இயக்குனர்கள் சீமான், சமுத்திரகனியிடம் உதவியாளராக இருந்த ஆர்.நாகேந்திரன் இயக்கும் படம் காவல் முன்னதாக இப்படத்திற்கு நீயெல்லாம் நல்லா வருவடா என்று பெயர் வைத்திருந்தனர். சமீபத்தில் தான் இப்படத்தை டைட்டிலை மாற்றினர்.
இப்படத்தில் விமல், சமுத்திரகனி, அமிர்தா, பார்பி ஹண்டா, புன்னகை பூ கீதா ஆகியோர்கள் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். ஜீ.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் நடந்து வந்தன.இந்நிலையில், வருகிற ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று காவல் படத்தின் ஆடியோவையும், அதனைத்தொடர்ந்து படத்தை மே 1ம் தேதி உழைப்பாளர் தினமும், நடிகர் அஜித்தின் பிறந்தநாளிலும் ரிலீஸ் செய்ய உள்ளனர். இத்தகவலை படக்குழு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment