2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணியின் சகலதுறை ஆட்டக்காரரான யுவராஜ் சிங் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது வென்றார்.
இதைத் தொடர்ந்து மோசமான பார்ம் காரணமாக சமீபத்திய உலகக்கிண்ணத் தொடரில் இருந்து கழற்றிவிடப்பட்டார். இருப்பினும் எட்டாவது ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இவரை ரூ.16 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது.
இந்நிலையில் ஐபிஎல் தொடர் பற்றி யுவராஜ் கூறுகையில், வரும் ஐபிஎல் தொடர் எனக்கு மிகவும் முக்கியமானது. இதில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில், மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
முதல் மூன்று தொடரில் மட்டும் டெல்லி அணி நன்றாக விளையாடியது. மற்றபடி கடந்த 7வது தொடரில் சொதப்பியது.
இம்முறை ஒருங்கிணைந்து செயல்பட்டு, டெல்லி அணியின் வெற்றிக்கு உதவ முடியும் என, நம்புகிறேன்.
‘சீனியர்’ வீரர் ஜாகீர் கானுடன் மீண்டும் இணைந்து விளையாடுவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
மேலும் கேன்சர்’ சிகிச்சை பெற்று மீண்டு வந்ததில் இருந்து கடந்த சில ஆண்டுகள் எனக்கு கடினமாக இருந்தது உண்மை தான். கடினமான முயற்சிக்குப் பின், தற்போது நல்ல உடற்தகுதியுடன் உள்ளேன் என்று கூறியுள்ளார்.
அதேபோல் இம்முறை டெல்லி அணியில் இணைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் கூறுகையில், கடந்த 2011ல் இந்திய அணி உலகக்கிண்ணம் வெல்ல காரணமாக இருந்தவர் கிறிஸ்டன்.
சிறந்த பயிற்சியாளரான இவருடன் மறுபடியும் சேர்ந்து, டெல்லி அணிக்காக அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என நம்புகிறேன். மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment