'காக்கி சட்டை' வெற்றி படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் தற்போது 'ரஜினி முருகன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சிவகார்த்திகேயனுக்கு படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு காயமடைந்ததாக இன்று காலை முதல் மிக வேகமாக ஒரு வதந்தி பரவி வருகிறது. இதுகுறித்து சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் வருத்தத்துடன் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வரும் நிலையில், சிவகார்த்திகேயன் தனது அதிகாரபூர்வமான சமூக வலைத்தளத்தில், 'தனக்கு எவ்வித விபத்தும் நடக்கவில்லை என்றும், தான் நலமாக இருப்பதாகவும், தற்போது மதுரை அருகே நடைபெற்று வரும் ரஜினிமுருகன் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயனின் விளக்கத்திற்கு பின்னே அவரது ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். மேலும் அவர் தனது சமுக வலைத்தளத்தில் 'ரஜினி முருகன்' படத்தின் பர்ஸ்ட் லுக் ஏப்ரல் 25ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் தனது ரசிகர்களுக்கு அவர் தெரிவித்துள்ளார். 'ரஜினி முருகனின் பர்ஸ்ட் லுக்கை வரவேற்க அவரது ரசிகர்கள் தற்போது முதலே தயாராகி வருகின்றனர்.
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, சமுத்திரக்கனி, ராஜ்கிரண் உள்பட பலர் நடித்து வரும் இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி தயாரித்து வரும் இந்த படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம்' பட இயக்குனர் பொன்ராம் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment