அஜித்திற்கு மங்காத்தா படம் மூலம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்து ஸ்டார் இயக்குனர் வரிசையில் இடம் பெற்ற வெங்கட் பிரபு அடுத்து சூர்யாவுக்கும் மாஸ் படம் மூலம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தித் தரும் ஆவலில் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார். படம் ஆரம்பமான நாளிலிருந்தே திட்டமிட்டபடி பரபரப்பாக நடைபெற்று வந்து இப்போது கடைசி கட்டப்படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இடையில் சில சில சர்ச்சைகள் எழுந்தாலும் அப்படியெல்லாம் எதுவுமில்லை என்று படத்தை முடிப்பதில்தான் அனைவரும் ஆர்வம் காட்டி வருகிறார்களாம். விரைவில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள பாடல்களின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. மே 1ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்து அதை நோக்கி மற்ற இறுதிக் கட்டப் பணிகளையும் செய்து வருகிறார்களாம்.
அஞ்சான் படத்தின் தோல்வியால் துவண்டிருந்த சூர்யாவிற்கு இந்தப் படம் நிறையவே நம்பிக்கையைக் கொடுத்துள்ளதாக அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்தப் படம் போலவே இந்தப் படத்திற்கும் ஓவராக எதிர்பார்ப்பை ஏற்படுத்தாமல் இருந்தால் போதும் என்று சூர்யாவின் ரசிகர்களும் நினைக்கிறார்கள். அதை படக்குழுவினர் சரியாக கடைபிடிப்பார்களா என்பதுதான் கேள்வி. ஏனென்றால், வெங்கட்பிரபு, பிரேம்ஜி ஆகியோர் டிவிட்டரில் எதையாவது ஒன்றை சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். சூர்யா அவர்களுக்கு வாய்ப்பூட்டையும், கூடவே டிவிட்டரில் எதையாவது பரபரப்பை ஏற்படுத்த, மொபைலையும் தொடாத அளவிற்கு கையையும் பூட்டி வைத்தால்தான் சரியாக இருக்கும் என்கிறார்கள். செய்வார்களா ?
0 comments:
Post a Comment