இன்று ஒரு தமிழ் படத்தை எடுப்பதை விட அதை வெளியிடுவது தான் மிகப்பெரிய கஷ்டம். ஒரு படத்தை பார்க்காமலே படத்தில் இந்த சர்ச்சை இருக்கும், இந்த சமூகத்தை தப்பா சொல்லி இருக்காங்க என்று ஏதோ ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த நபர்கள் தடை செய்ய கூறி வழக்கு போடுகின்றனர்.
இது போன்ற சம்பவத்தை விஸ்வரூபம், தலைவா, கத்தி, தற்போது கொம்பன் வரை தமிழ் சினிமா சந்தித்து வந்துள்ளது. இனிமேல் இது போன்ற செயல் நடக்காமல் இருக்க பிரபல தயாரிப்பாளர் கேயார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உண்மையில் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் அதில் தப்பான கருத்து இருக்கு என்று நீங்கள் நினைத்தால் அந்த மனுதாரர் வழக்கு தொடரும் அந்த படத்தின் பட்ஜெட்டிலிருந்து ஒரு 10 சதவிகிதம் நீதிமன்றத்தில் டெபாசிட் கட்ட வேண்டும் அப்போது தான் வழக்கு தொடர நினைப்பவர்கள் ஒரு படத்தை எவ்வளோ செலவு செய்து எடுக்கின்றனர் யோசித்து பார்ப்பார்கள்.
மேலும் அப்படி அந்த படத்தில் அவர்கள் சொல்லும் எந்த தப்பான விஷயமும் இல்லையென்றால் அவர்களுக்கு ஜெயில் தண்டனையும், அபராத தொகையும் கட்டும்படியாக சட்டம் கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment